கணினியும் தமிழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினியும் தமிழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 16, 2021

அலகு 5 இணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்

 

https://tamilkaniniworld.blogspot.com/2012/04/blog-post_3573.html 

இணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்!



1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R.லிக்லிடர் அறிமுகப்படுத்தினார்.


1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் இந்டெர்னெட் என்ற வார்த்தையை முதன் முதலில் Transmission Control Protocol Pape  இல் பயன்படுத்தினர்.

1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இடமாற்றிக்கொடுக்க உதவும்  Ethernet   மற்றும் Coaxial Cable  இனைக் கண்டுபிடித்தார். Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks (LAN) இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று.

1978 – பெரிதுவெக் தனது minicomputer மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார்.

1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப்பட்டது. இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol  ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின் மையமானது.

1984 – Internet Engineering Task Forceஇனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல் .com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார்.

1985 – அனைத்து  NSFNET Program இற்கு   TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார்.

1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF) Image இனை வெளியிட்டது. இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்படவில்லை.

1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet  இனை வழங்கியது.

1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது.

1993 – முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட Internet browser Md Mosaic For X இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரசன் உருவாக்கினார்.

1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் order செய்யும்  முறையை வெப்சைட் மூலம் அறிமுகப்படுத்தியது.

1995 – தற்போது ebay எனப்படும்  Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார்.

1996 – Network of research and Education institutions எனப்படும் Internet 2 வெளியிடப்பட்டது.  Hotmail ஆரம்பிக்கப்பட்டது.

1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google  நிதியினைப் பெற்றது.

1999 –  Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது.

2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது.

2004 – ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail  இனை ஆரம்பித்தது. hotmail மற்றும் yahoo முறையே 2MB  மற்றம் 4MB அளவில் தரவுகளைப் பகிர்ந்துவந்த நிலையில் Gmail  இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool  நிகழ்வாகக் கருதினர்.

2005 –  Youtube ஆரம்பிக்கப்பட்டது.

2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.

2009 –Mobile data traffic exceeded அறிமுகம்.

அலகு 3 - அகர வரிசையாக்கம்

https://kaninitamil.wordpress.com/2018/02/25/tamil-sorting/ 

தமிழ் எழுத்துக்களின் அகரவரிசை

மூலம்: எதிர்நீச்சல் வலைப்பதிவு
அகரவரிசை என்பது ஒரு மொழியின் பல சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒழுங்குப்படுத்தும் முறையாகும். இது மொழி இலக்கணத்திற்கு நேரடி தொடர்பில்லை என்றாலும் மொழியினைப் படிப்பவருக்கு எளிதாக்கவே அகரவரிசை பயன்படுகிறது. தற்காலத்தில் குறிப்பாகக் கணினி பயன்பாட்டுச் சூழலில் அகரவரிசைப் படுத்தலுக்குப் பல கருவிகள் உள்ளன. பொத்தானை அழுத்தினால் அகர  வரிசையில் சொற்களை ஒழுங்குப்படுத்த முடியும். பெரும்பாலும் மைக்ரோசாப்ட் போன்ற சொல்லாளர்களில் sort செய்து கொள்கிறோம். ஆனால் தமிழில் அகரவரிசைப்படுத்தி எழுதுதல் என்பது பொதுவாக ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டு முக்கிய குழப்பங்கள் நிகழ்கின்றன. மேலும் கிரந்த எழுத்தும், நகர, னகர, லகர,ளகர, ழகர ஒழுங்கும் மாற்றுகின்றன.



இந்த மூன்று குழப்பங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆயுத எழுத்தான “ஃ” என்பது சில இடங்களில் “அ”விற்கு முன்னும் “ஔ” விற்குப் பின்னும் வருகிறது. அடுத்து ஒற்றெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்திற்கு முன்னும்  பின்னும் வருகின்றன. அதாவது “க”க்கு முன் “க்” அல்லது “கௌ”க்குப் பின் “க்”. இவ்விரண்டு குழப்பங்களும் பல பரவலாகப் புழக்கத்தில் உள்ளன.  இறுதியான குழப்பமான ஒழுங்கு மாறுதல் என்பது ஒருங்குறி வரிசையில் ஏற்பட்ட வரிசைமுறையே காரணம். ஒருங்குறியில் நுட்பக் காரணங்களால் ஃ, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, ங, ச, ஜ, ஞ, ட, ண, த, ந, ன, ப, ம, ய, ர, ற, ல, ள, ழ, வ, ஶ, ஷ, ஸ, ஹ என்றே வரிசைப்படுத்தியுள்ளனர். இதனால் சராசரி கணினி மென்பொருள் சகரத்திற்குப் பின் ஜகரம் என்றே தமிழில் வரிசைப்படுத்தும். இது நுட்பப் பிழை என்பதால் முறையாகத் திருத்தி எழுதிவிடலாம்; அதுசரி என்று நமக்கு விளங்குகிறது. மைக்ரோசாஃப்ட் 2010 பதிப்பிற்குப் பின் அதன் வரிசைப்படுத்தலில் இச்சிக்கலை நீக்கியுள்ளது. அதே போல சில மென்பொருட்களும் இந்தச் சிக்கலைச் சீர் செய்தாலும் மேலே சுட்டியுள்ள இரு குழப்பம் இன்னும் நீடிக்கின்றன. 

கீழ்க்கண்ட வரிசையே சீரானது அதையே பயன்படுத்துவோம்.

அனைத்து கணினி மொழியிலும் தமிழுக்கு ஏற்ப வரிசைப்படுத்த முடியும். சாதாரணப் பயனர்கள் தங்கள் சொற்களை இணையத்தில் அகரவரிசைப்படுத்த சுளகு (http://dev.neechalkaran.com/p/sulaku.html) கருவியைப் பயன்படுத்தலாம்.

அலகு 4 - ஒளியியல் வழி எழுத்துக்களை அடையாளம் காணல் (OCR)

 https://www.i2ocr.com/free-online-tamil-ocr











http://ocr.tamil.subasa.lk/



அலகு 4 பேச்சிலிருந்து எழுத்துருவாக்கம் (voice to text)

 

1. https://tamil.samayam.com/tech/tips-tricks/how-to-use-voice-typing-feature-in-google-docs-and-what-are-voice-commands-it-has/articleshow/71082123.cms 

2. https://spechtotext.com/VoiceTyping/SpeechToTextTamil

3. https://www.typingguru.net/voice-to-text/tamil-voice-typing


01. முதலில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களின் microphone நல்லபடியாக வேலை செய்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

02. இப்போது க்ரோம் பிரவுசரில் இருக்கும் Google docs-ல் document ஒன்றை திறக்கவும்.

03. பின்னர் Tools-ற்குள் நுழைந்து Voice typing எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது வெறுமனே Ctrl + Shift + S என்கிற ஷார்ட்கட்டை பயன்படுத்தவும்.

How to find Voice Typing Feature in Google Docs
04. இப்போது ஸ்க்ரீனில் இடது மேல் பக்கமாக ஒரு microphone box காட்சிப்படும்.

05. நீங்கள் வாய்ஸ் டைப்பிங் செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்றால், அந்த microphone-ஐ கிளிக் செய்யவும்.

06. சாதாரண ஒலி அளவு மற்றும் வேகத்தில் தெளிவாக பேசுங்கள் (Punctuations-களை பயன்படுத்துவது பற்றிய கூடுதல் தகவலை கீழே வழங்கியுள்ளோம்).

07. பேசி முடித்ததும், மீண்டும் மைக்ரோஃபோனைக் கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.

வாய்ஸ் டைப்பிங் செய்யும் போது எதாவது தவறுகளை செய்து விட்டால், அதை திருத்துவது எப்படி?

கையால் டைப்பிங் செய்யும்போதே தவறுகள் ஏற்படுவது சகஜம், ஆகையால் வாய்ஸ் டைப்பிங் செய்யும் போது ஏற்படும் தவறுகளை பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அதை திருத்தவும் ஒரு வழி இருக்கிறது. ஒருவேளை வாய்ஸ் டைப்பிங் செய்யும் போது நீங்கள் தவறு செய்தால், உங்கள் கர்சரை குறிப்பிட்ட தவறுக்கு நகர்த்தி, மைக்ரோஃபோனை அணைக்காமலேயே அதை சரிசெய்யலாம்.

தவறை சரிசெய்த பிறகு, கர்சரை நீங்கள் தொடர விரும்பும் இடத்திற்கு நகர்த்தவும், பின் வாய்ஸ் டைப்பிங்கை தொடரவும். Suggestions-களின் பட்டியலைக் காண, சாம்பல் நிறத்தில் அடிக்கோடிட்ட சொற்களை ரைட்-கிளிக் செய்யவும்.

வாய்ஸ் டைப்பிங் வழியாகவே நீங்கள் உங்களது உரையில் நிறுத்தற்குறிகளை (Punctuations) சேர்க்கலாம். அதை நிகழ்த்த இந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தவும்:

Period (முற்றுப்புள்ளி)
Comma (காற்புள்ளி)
Exclamation point (ஆச்சரியக்குறி)
Question mark (கேள்வி குறி)
New line (புதிய கோடு)

New paragraph (புதிய பத்தி)

வாய்ஸ் டைப்பிங்கின் போதும் கீழ் தொகுக்கப்பட்டுள்ள எந்தவொரு குரல் கட்டளைகளையும் (Voice commands) நீங்கள் நிகழ்த்தலாம்:

அதாவது நீங்கள் வாய்ஸ் டைப்பிங்கில் இருக்கும்போது உங்கள் ஆவணத்தைத் திருத்தவும் வடிவமைக்கவும் இந்த குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு, "Select paragraph" அல்லது "italics" அல்லது "Go to the end of the line" போன்றவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

குரல் கட்டளைகள் ஆனது ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் Account language (பேசும் மொழி) மற்றும் Document language (எழுத்தாக பதிவாகும் மொழி) ஆகிய இரண்டுமே ஆங்கிலமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

****************************************************

https://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil 

உரைக்கு தமிழ் பேச்சு

குறிப்பு:  இந்த மென்பொருள் Google Chrome இல் (பதிப்பு 25 அல்லது அதற்கு மேற்பட்ட) உலாவியில் மட்டுமே இயங்குகிறது. நீங்கள் மற்றொரு உலாவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது இயங்காது. Google Chrome ஐ  இங்கே பதிவிறக்கி நிறுவவும் .




மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வரை பேசத் தொடங்குங்கள்.


   

 தமிழ் மொழியில் உரை தட்டச்சு செய்வதற்கான வரலாற்று  உரையில் முதல் . உங்கள் மைக்கை அமைத்து மைக் பொத்தானை அழுத்தினால், மென்பொருள் உங்கள் குரலை அடையாளம் கண்டு தானாகவே தமிழ் உரையில் தட்டச்சு செய்யும். இந்த தட்டச்சு செய்த உரையை நீங்கள் சேமித்து எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். இப்போது நீங்கள் உங்கள் கைக்கு ஓய்வு கொடுக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பும் வரை பேசுவதன் மூலம் தட்டச்சு செய்யலாம். உரை மாற்றிக்கு  இலவச உலகின் முதல்  தமிழ் குரல் .

சிறந்த முடிவுகளுக்கான சில வழிமுறைகள்:

1. உயர் தரமான மைக்கைப் பயன்படுத்துங்கள்.

2. தெளிவாகவும் சத்தமாகவும் பேசுங்கள்.

3. பேசுவதில் மிக வேகமாக இல்லை, சிறிது மெதுவாக பேசுங்கள், இதனால் மென்பொருள் உங்கள் குரலை சரியாக அடையாளம் காண முடியும்.

4. உங்கள் உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.

***********************************************************************************************

https://www.unicodeconverter.info/voice-to-tamil-text-converter.php