புதன், டிசம்பர் 14, 2011

சாதியக் கருக் களைப்பு

கருவேல மரமாக
காலூன்றிக் கிடக்கின்றன
சாதிகள்,
கிளைகளைத்தான்
வெட்டுகிறது
உன்
போர் வாள்,
அடியோடு
தோண்டினாலும்
அழிக்க முடியாது,
கருவை
கலைத்துவிடு
விதைத்தால் தானே
முளைப்பதற்கு.