திங்கள், நவம்பர் 21, 2022

TRB அலகு – 5 சமய இலக்கியம்

                                                                                                    முனைவர் கு. ராஜா

 உள்ளடக்கம்

      

1.     சமணம்:        பெருங்காப்பியம்; 1. சிலப்பதிகாரம், 2. சீவகசிந்தாமணி

                சிறுங்காப்பியம்; 1. சூளாமணி, 2. நீலகேசி

2.   பௌத்தம்:      பெருங்காப்பியம்; 1. மணிமேகலை, 2. குண்டலகேசி

3.   சைவம்:        பன்னிருதிருமுறைகள்

                திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், தல புராணங்கள்

                தாயுமானவர் பாடல்கள்

4.   வைணவம்:     நாலாயிரத்திவ்ய பிரபந்தம், வள்ளலார் பாடல்கள், 

                    கம்பராமாயணம், வில்லிபாரதம், அஷ்டபிரபந்தம்

5.   இசுலாம்:       சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

6.   கிறிஸ்தவம்:    தேம்பாவணி, இயேசு காவியம்

இரட்சண்ய யாத்ரீகம், இரட்சண்ய மனோகரம்

7.   சித்தர் இலக்கியம்:    பட்டினத்தார், பத்திரகிரியார், இடைக்காட்டுச் சித்தர்

கடுவெளிச்சித்தர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர்

                         சைவம்

பன்னிருதிருமுறைகள் – 63 நாயன்மார்கள்

திருஞானசம்பந்தர்

v  சமயக்குரவர்களுள்        முதலானவர்

v  திருமுறைகள்             1, 2, 3

v  ஊர்:                       சோழநாட்டிலுள்ள சீர்காழி

v  பெற்றோர்:                சிவபாத இருதயர், பகவதி

v  சம்பந்தர் வேறுபெயர்கள்: ஆளுடைய பிள்ளை, காழி வள்ளல்,                                       

                            பரசமயக் கோளரி

v  மார்க்கம்                  சத்புத்ர மார்க்கம்

v  அவதாரம்                 முருகனின் அவதாரம்

v  சிறப்பு                     பக்தி இயக்கத்தின் முன்னோடி, 

                               இன்தமிழ் ஏசுநாதர்

v  ஞானப்பால் குடித்த வயது மூன்று

v  திருமண வயது            பதினாறு

v  மனைவி                  சொக்கியார்

v  நூற்றாண்டு               ஏழு

v  இறைவனடி சேர்தல்       திருப்பெருமண நல்லூரில் 

                            மணக்கோலத்துடன் இறைவனடி சேர்ந்தார்.

v  சீர்காழி வேறுபெயர்கள்:    தோனிபுரம், பிரமபுரம், வேணுபுரம்

v  ஆட்கொள்ளப்பட்ட இடம்: சீர்காழி

v  பதிகங்கள்:                16000

v சுந்தரர் கூற்று:             “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்                                    ஞானசம்பந்தன்” 

v  பெரியபுராணச் செய்தி:     “பிள்ளை பாதி புராணம் பாதி”

v  ஆதிசங்கரர் கூற்று:        திராவிட சிசு

v  வழிபட்ட தளங்கள்        220

v  பாடிய பண்கள்            23

v  பெற்ற பொருட்கள்

திருக்கோலாக்கா          பொற்றாளம்

திருவாயிலத்துறை        முத்துச் சிவிகை

பட்டீசுரம்                  முத்துப்பந்தர்

திருவாடுதுறை            பொற்கிழி

திருவீழிமிழழை            படிக்காசு

அற்புதங்கள்

v  திருமுறைக்காடு           கோயிலில் கதவுகள் மூடும்படிப் பாடியவர்.

v  காவிரி                    ஓடம் தானாக இயங்கும்படிச் செய்தவர்.

v  மயிலை                   பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையைச் சாம்பல் 

                            நிலையிலிருந்து உயிர்பெறச் செய்தவர்.

v  திருப்பாச்சிலாச்சிரமம்     மழவன் மகளுடைய முயலகன் நோய் நீக்கினார்.

v  செங்குன்றூர்              அடியார் குளிர் நீக்கினார்

v  திருமருகல்                பாம்பு தீண்டிய வணிகனின் விஷம் நீக்கினார்

v  மதுரை                   பாண்டியனின் வெப்பு நோயை நீக்கி, 

                            கூன் நிமிரச் செய்தார்.     

v  திருவோத்தூர்             ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர்.

v  பதிகச் சிறப்பு

8வது பாடல்               இராவணனைப் பாடுதல்

9வது பாடல்               சிவபெருமானின் பெருமை

10வது பாடல்              சமணத்தைச் சாடுதல்

பாடல்கள்

v  முதல் பாடல்              “தோடுடைய செவியன்”

v  மன்னன் நோய் நீங்க      “மந்திரமாவது நீறு”

v  புனல் வாதப் பாடல்       “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்”

v  நாயகன் நாயகி பாவம்     “சிறையாரும் மடக்கிளியே! இங்கேவா”

v  “நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை”

v  “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்”

v  “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேத நான்கினு மெய்ப்பொருளாவது

நாத நமச்சிவாயவே”

v  “மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்”

திருநாவுக்கரசர்

v  திருமுறைகள்             4, 5, 6

v  ஊர்:                       திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்

v  பெற்றோர்:                புகழனார், மாதினியார்

v  இயற்பெயர்கள்:            மருள்நீக்கியார், சமணத்தில் தருமசேனர்

v  வேறு பெயர்கள்           வாசீகர், தாண்டக வேந்தர், அப்பர், 

                            ஆளுடைய அரசு

v  மதமாற்றம்                சமணத்திலிருந்து சைவம் 

                            முதலாம் மகேந்திரவர்மன்

v  தமக்கை                   திலகவதியார்

v  பெயர்க் காரணம்

திருநாவுக்கரசர்            பதிகத் தொடை பாடியதால்

                           திருவதிகையில் சிவன் அழைத்தார்.       

தாண்டக வேந்தர்          தாண்டகச் செய்யுள் இயற்றியதால்   

அப்பர்                     சம்பந்தர் அழைத்தார்      

தருமசேனர்               சமணத்தில் வல்லமை பெற்றிருந்ததால்   

v  திருக்காளத்தி வேறுபெயர்: தென்கயிலை

v  அப்பூதியடிகள்             திருநாவுக்கரசரை வழிபட்டு வந்தார்.

v  மார்க்கம்                  தாச மார்க்கம்

v  வயது                     81 திருப்புகலூரில் இறைவனடி சேர்தல்.

v  நூற்றாண்டு                6இன் இறுதி 7இன் முதல் 

v  பதிகங்கள்:                4900      

    அற்புதங்கள்

v  பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகள் மைந்தனை உயிர்பெறச் செய்தார்.

v  திருமறைக்காடு      கோயிலில் கதவுகள் திறக்கும்படிப் பாடியவர்.

v  திருவதிகை          உழவாரப்படை கொண்டு பணி செய்தல்.

v  திருவையாறு   கையிலாயக் காட்சி கண்ட இடம்

பாடல்கள்

v  இவரைக் கொல்ல மன்னன் படைகளை அனுப்பிய போது

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”

v  நீற்றறையில் இட்ட போது:     

“மாசில் வீணையும் மாலை மதியமும்”

v  கடலிலிட்ட போது:       

“சொற்றுணை வேதியன் சோதியானவன்”

v  தமிழ்ச்சங்கம் குறித்து

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழி தருமிக் கருளினோன் காண்”

v  “என் கடன் பணி செய்து கிடப்பதே”

v  “மனமென்னும் தோனி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது”

v  ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே”

v  “நற்றுனையாவது நமச்சிவாயமே”

v  “இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

v  “சாத்திரம் பேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்”

v  “ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்

கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் யாம்வணங்கும் கடவுளாமே”

v  “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்

உமிழ் சிரிப்பும்”

சுந்தரர்

v  திருமுறை                7 ஆம்

v  ஊர்                       தொண்டைநாடு, திருமுனைப்பாடியில் 

                            திருநாவலூர்

v  பெற்றோர்                 சடையனார், இசைஞானியார்

v  வயது                     81 கைலாயத்தில் இறைவனோடு சேர்ந்தார்.

v  பதிகங்கள்                 38000

v  வேறுபெயர்கள்            வன்தொண்டர், நாவலூரர், தம்பிரான் தோழன்.

v  வன்தொண்டர்             சிவனையே பரவையாரிடம் தூது 

                            அனுப்பியவர் என்பதால்

v  தம்பிரான்தோழன்          இறைவனுக்குத் தோழன் என்பதால்

v  ஆட்கொள்ளப்பட்டஇடம்    திருவெண்ணெய் நல்லூர்

v  மனைவியர்               பரவையார், நாச்சியார்

v  திருத்தொண்டத் தொகை   பெரியபுராணத்திற்கு அடிப்படையானது

v  அற்புதங்கள்

v  திருப்புகலூர்               தலைக்கு வைத்த செங்கல் தங்கமானது

v  பன்னீராயிரம் பொன்      மணிமுத்தாற்றில் இட்டு 

                            கமலாயத்தில் எடுத்தார்.

v  பார்வை இழப்பு            காஞ்சியில் ஒரு கண், ஆரூரில் ஒரு கண்

பெற்றார்.

v  திருப்புக் கொளித்தலம்     சுந்தரருக்காக காவிரி ஆறு இரு கூறாகியது. 

v  அவிநாசி                  முதலையுண்ட பாலனை எழுப்பினார்.

v  நூற்றாண்டு               8 மற்றும் 9இன் தொடக்கம்

பாடல்கள்

v  திருத்தொண்டத் தொகையின் முதல் அடி

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

மாணிக்கவாசகர்

v  திருமுறை           8ஆம்

v  பாடப்பட்டவை       திருவாசகம், திருக்கோவையார்

v  திருவாசகம்          மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதியது.

v  திருக்கோவையார்    “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று                             

                        இறைவன் கேட்டுக் கொண்டமையால் பாடியது.

v  திருக்கோவை        திருச்சிற்றம்பலக் கோவை (வேறுபெயர்)

v  ஊர்                  பாண்டிய நாட்டு, திருவாதவூர்

v  பட்டம்               தென்னவன் பிரம்மராயன் (அரிமர்த்தன

பாண்டியனிடம் அமைச்சராக இருந்து பெற்றது.

v  திருப்பெருந்துறை    குருந்த மரத்தடியில் இறைவனே ஞானாசிரியராகக்

காட்சிதந்தார்.

v  பதிகம்               51

v  வயது                31 ஆண்டுகள்

v  மார்க்கம்             ஞானமார்க்கம்

v  மகளிர் பாடல்கள்    திருவெம்பாவை, திருவம்மானை,

திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம்.

v  திருவம்மானை       பெண்கள் கல் வைத்து விளையாடிப் பாடுவது

v  திருப்பொற்சுண்ணம்  வாசனைப் பொடி இடிக்கும்போது பாடுவது

v  திருப்பூவல்லி        பூப்பறிக்கும்போது பாடுவது.

v  மு.வ. கூற்று         தாய்லாந்திலுள்ள சயாம் நகரில் திருவெம்பாவையும்

திருப்பாவையும் ‘திரியெம்பாவ, திரிபாவ’ எனும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

v  மொழிபெயர்ப்பு       ஆங்கிலத்தில் ஜி.யு.போப்

v  சிவப்பிரகாசர்        “திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

                        கருங்கல் மனமும் கரைந்துக கண்கள்                                    

                         தொடுமணற் கேணியில் சுரந்து”

v  வள்ளலார்           “ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பது”

v  சீர்காழி தாண்டவராயர்          திருவாசக வியாக்யானம்

v  பொழிப்புரை                    கா. சு. பிள்ளை

v  சிவபுராணம்                    சைவர்கள் அந்திமக் காலத்தில் பாடுவது

v  சமயக்குரவர் நால்வரில் சிறப்புமிக்கவர்.

v  காலம்                    9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.

v  அற்புதங்கள்

v  இறைவன் நரிகளைப் பரிகளாக்கியது

v  ஊமைப் பெண்ணைப் பேச வைத்தது

v  இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தது

v  பாடல்கள்

v  சிவபுராணத்தின் தொடக்க வரி “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க”

v  திருவெம்பாவை தொடக்க வரி “ஆதியும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ்சோதி”

v  “தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி”

v  “புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப்

பறவையாய் பாம்பாகி…”

v  “ஊரெல்லாம் கூவி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

சூரியங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\

நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.”

ஒன்பதாம் திருமுறைகள்

v  9ஆம் திருமுறை          திருவிசைப்பா, திருப்பல்லாண்டு

v  திருவிசைப்பா பாடியோர்   1. திருமாளிகைத் தேவர், 2. சேந்தனார் 

                        3. சேதிராயர் 4. கண்டராதித்தனார் 

                       5. பூந்துருத்தி காடவ நம்பி 6. திருவாலி அமுதனார்                         

                        7. புருடோத்தம நம்பி 8. கருவூர்த்தேவர் 

                        9. வேணாட்டடிகள்

v  திருப்பல்லாண்டு          (பாடியவர்) சேந்தனார்

பத்தாம் திருமுறை

v  திருமூலர்            திருமந்திரம் - 3000 பாடல்கள்

9 தந்திரங்கள், 232 அதிகாரங்கள்

v  காலம்               6ஆம் நூற்றாண்டு

v  திருமூலர் கூற்று     “அன்பே சிவம்”

v  திருவாடுதுறை       திருமூலர் யோகத்தில் ஆழ்ந்த இடம்

v  திருமந்திரம்          தமிழ் மூவாயிரம் (வேறுபெயர்)

முதல் சித்த நூல்

‘சைவ சித்தாந்தம்’ எனும் தொடர் முதலில் இடம்பெற்ற நூல்

v  பாடல்கள்

v  ஐம்புலன் அடக்கம் குறித்தப் பாடல்

“பார்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்

பார்பான் பசுவைந்தும் பாலாச் சொறியுமே”

v  “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

v  “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

v  “அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”

v  “மரத்தை மறைத்தது மாமத யானை”

v  அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்”

v  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

பதினோராம் திருமுறை

v  பதினோராம் திருமுறை    பிரபந்தமாலை

v  பிரபந்தமாலை பாடியோர்  1. காரைக்காலம்மையார்

2. திருஆலவாயுடையார் (திருமுகப் பாசுரம்)

3. அய்யடிகள் காடவர்கோன் 4. சேரமான் பெருமாள் நாயனார் 5. நக்கீரர் 6. கல்லாடர் 7. கபிலர் 8. பரணர்

9. எம்பெருமாள் அடிகள் 10. அதிரா அடிகள்

11. நம்பியாண்டார் நம்பி 12. பட்டினத்தடிகள்

v  காரைக்காலம்மையார்    1. திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம்,

2. அற்புதத் திருவந்தாதி (அந்தாதித் தொடை)

3. திருவிரட்டை மணிமாலை

v  இயற்பெயர்                புனிதவதியார்

சிவனால் ‘அம்மையே’ என அழைக்கப்பட்டவர்

v  கணவர்                   பரமதத்தன்

v  திருவாலங்காடு           தலையால் நடந்து இறைவனை வழிபட்டார்

அமர்ந்த கோலத்தில் இருப்பவர்.

v  பாடல் வரிகள்             “பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்

உன்னை என்றும் மறவாமை வேண்டும்”

v  திருஆலவாயுடையார்      திருமுகப் பாசுரம்

v  சேரமான் பெருமாள்       1. பொன்வண்ணத்தந்தாதி

                           2. திருக்கயிலாய ஞான உலா (ஆதி உலா)

    

v  நக்கீரர்                    1. கைலைபாதிக் காளத்தி பாதி

2. திருவெழுக்கூற்றிருக்கை

v  நம்பியாண்டார் நம்பி       1. திருத்தொண்டர் திருவந்தாதி

2. திருக்கலம்பகம், 3. திருத்தொகை

தமிழ் வியாசர் எனப்படுபவர்.

பன்னிரெண்டாம் திருமுறை

v  பெரியபுராணம்       சேக்கிழார் (தொண்டர் சீர் பரவுவார்)

2 காண்டம் 13 சருக்கம்

பன்னிரெண்டாம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது.

திருத்தொண்ட புராணம் (சேக்கிழார் இட்ட பெயர்)

குறிப்புரை எழுதியவர் – திரு.வி.க.

v  சேக்கிழார்           இயற்பெயர் - அருண்மொழித்தேவர்

வேறுபெயர் - தொண்டர் சீர் பரவுவார்

v  ஊர்                  குன்றத்தூர்

v  சேக்கிழார் காலம்    12ஆம் நூற்றாண்டு

v  சேக்கிழார் புராணம்             உமாபதி சிவாச்சாரியார்

v  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்      மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருவிளையாடல் புராணம்

v  புராணம் என்றால் வரலாறு என்று பொருள்.

v   

v  கல்லாடம், சுந்தரபாண்டியம்     சிவபெருமானின் திருவிளையாடல்களைப்

பற்றி முதன் முதலில் விளக்கும் நூல்கள்

v  கல்லாடம்                      கல்லாடர் (11ஆம் நூற்றாண்டு)

பழமொழி                       “கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே”

v  பெரும்பற்றப் புலியூர் நம்பி -    முதன் முதலில் திருவிளையடல்

புராணம் எழுதியவர். (13 ஆம் நூற்றாண்டு)

v  பரஞ்சோதி முனிவர்            திருவிளையாடல் புராணம்

(16ஆம் நூற்றாண்டு.) புகழ் பெற்றது.

3 காண்டங்கள்,

(1. மதுரை, 2. கூடல், 3. திருவாலவாய்

68 படலங்கள்,

64 திருவிளையாடல்கள்

     ஊர்                             திருமறைக்காடு

     உரை                இராமலிங்க பிள்ளை, இரத்தினவேலு முதலியார்.

கந்த புராணம்

v  கச்சியப்ப சிவாச்சாரியார்        கந்த புராணம்

6 காண்டங்கள், 10000 மேற்பட்ட பாடல்கள்

v  ஊர்                            காஞ்சி

v  காலம்                          12ஆம் நூற்றாண்டு

v  ரா.பி. சேதுபிள்ளை              கம்பராமாயணத்தை ஒத்துள்ளது.

v  பரிதிமாற்காலைஞர்             நடை முக்கனி போன்றது.

முருகப் பெருமானின் பிறப்பு, சிறப்பு, சூரபத்மனை வெல்லுதல், வள்ளி, தெய்வானை திருமனம் முதலானவை குறிபிடத்தக்கவை.

v  தல புராணங்கள்

v  கச்சியப்ப முனிவர்              தணிகை புராணம், விநாயக புராணம்

v  சிவப்பிரகாசர்                   திருக்கூவப் புராணம், சீகாளத்தி புராணம்

v  வீரகவிராயர்                    அரிச்சந்திர புராணம்

v  வீரராகவ முதலியார்            திருக்கழுக் குன்றப் புராணம்

v  ஞானப் பிரகாசர்                திருவொற்றியூர் புராணம்

v  வடமலையப்பர்                 மச்சபுராணம்

v  மண்டல புருடர்                 ஸ்ரீபுராணம்

v  வாமன முனிவர்                மேரு மந்திர புராணம்

v  உமாபதி சிவாச்சாரியார்         கோயில் புராணம்

v  திருமலை நாதர்                சிதம்பர புராணம்

v  மீனாட்சி சுந்தரம்பிள்ளை        மிகுதியான தல புராணங்கள் பாடியவர்

v  தாயுமானவர்

v  ஊர்                  திருமறைக்காடு

v  பெற்றோர்            கேடிலியப்பிள்ளை, கெசவல்லி அம்மை

v  அமைச்சர்            விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்

v  மனைவி             மட்டுவார் குழலி

v  மகன்                     கனகசபாபதி

v  மார்க்கம்             சமரச சன்மார்க்கம்

v  “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே வேறொன்றும்

அறியேன் பராபரமே”

v  பராபரக் கன்னிப் பாடல்

“நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர்,

பூசை கொள்ள வாராய் பராபரமே”

 

வைணவம்

நாலாயிரத் திவ்ய பிரபந்தம் – பன்னிரு ஆழ்வார்கள்

v  நாலாயிரத் திவ்ய பிரபந்தம் நாதமுனிகள் (தொகுப்பு)

                           உரைக்கு ‘ஈடு’ என்ற பெயருண்டு.

v  வேறுபெயர்கள்            தமிழ்மறை, திராவிட சாகரம்.

v  திவ்விய தேசங்கள்        ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108                                            வைணவத் தளங்கள்

v  ஆழ்வார்கள்               திருமாலின் குணங்களில் ஆழ்ந்து                                        ஈடுபட்டமையால் ஆழ்வார்கள்

v  முதல் ஆழ்வார்கள்        1. பொய்கை ஆழ்வார், 2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

v  பொய்கையாழ்வார்

v  பாடல்கள்                 முதல் திருவந்தாதி

v  ஊர்                       காஞ்சிபுரம்

v  பெயர்க்காரணம்           பொய்கையிலிருந்து பிறந்தவர்

v  அம்சம்                    சங்கின் அம்சம்

v  முதன் முதலில்           திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர்

v  முதல் பாடல்                  “வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்யக் கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே என்று”

v  சிறப்பு                     சூரியனையே விளக்காக ஏற்றியவர்.

v  பூதத்தாழ்வார்

v  பாடல்கள்                 இரண்டாம் திருவந்தாதி

v  ஊர்                       மாமல்லபுரம் (மாமல்லை)

v  பெயர்க்காரணம்           திருமாலை பூதம் என்று பாடியமையால்

v  அம்சம்                    கதாயுதத்தின் அம்சம்

v  முதல் பாடல்                  “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 

                                இன்புருகுஞ் சிந்தை இடுதிரியாய் – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்”

v  சிறப்பு                     ஞானத்தை விளக்காக ஏற்றியவர்.

v  பேயாழ்வார்

v  பாடல்கள்                 மூன்றாம் திருவந்தாதி

v  ஊர்                       மயிலாப்பூர் (திருமயிலை)

v  பெயர்க்காரணம்           பக்தியின் மேன்மையால் பேய் பிடித்ததுபோல்

இருந்தமையால் இப்பெயர் பெற்றார்.

v  அம்சம்                    வாளின் அம்சம்

v  திருக்கோவிலூர்           முதலாழ்வார்கள் சந்தித்துக் கொண்ட இடம்

v  முதல் பாடல்              “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று”

v  சிறப்பு                     நுன்பொருளை விளக்காக ஏற்றியவர்.

v  திருமழிசையாழ்வார்

v  பாடல்கள்                 திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி

v  ஊர்                       திருமழிசை

v  திருவல்லிக்கேணி         நெடுங்காலம் யோகத்தில் ஆழ்ந்த இடம்

v  வேறுபெயர்கள்            சக்கரத்தாழ்வார், பக்திசாகரர்

v  பெயர்க்காரணம்           பிறந்த ஊரின் தன்மையில் பெயர்பெற்றவர்.

v  இவருடைய சீடன்         கணிகண்ணன்

v  முதல் பாடல்            “கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடனே

செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”

v  காலம்                   8ஆம் நூற்றாண்டு – முதலாம் நரசிம்மபல்லவன்

v  பெரியாழ்வார்

v  பாடல்கள்                 திருமொழி, திருப்பல்லாண்டு

v  ஊர்                       ஸ்ரீவில்லிபுத்தூர்

v  இயற்பெயர்                விஷ்ணுசித்தர்

v  வேறுபெயர்கள்            பட்டர்பிரான், கிழியறுத்த ஆழ்வார்

v  அம்சம்                    கருட அம்சம்

v  முன்னோடி                பிள்ளைத்தமிழ் இலக்கியம்

v  தாலாட்டு                        கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து

தாலாட்டுப் பாடல் பாடியவர்

     கண்ணனைப் பாதாதிகேசமாகப் பாடியவர்

     நாயகன் நாயகி            தன்னை யசோதையாகப் பாவித்துப் பாடியவர்

v  ஆண்டாள்                     வளர்ப்புத் தந்தை

கோதை எனப் பெயரிட்டவர்

v  பாடல்                    “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து

பலகோடி நூராயிரம்”


“மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி

ஆணிப்பொன்னாற் செய்த வண்ணச் சிறுதொட்டில்

                     பேணி உனக்குப் பிரமன் வீடுதந்தான்

                     மாணிக் குறளனே தாலேலோ!

                     வைய மளந்தானே! தாலேலோ!”

v  காலம்               9ஆம் நூற்றாண்டு - ஸ்ரீவல்லபதேவன்

v  ஆண்டாள்

v  பாடல்கள்                 திருப்பாவை, நாச்சியார் திருமொழி(143)

v  ஊர்                       ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்

v  பெயர்க்காரணம்           திருமாலை மணந்தார் (ஆண்டாள்)

v   

v  அம்சம்                    பூமகள் அம்சம்

v  முதன் முதலில்          

v  பாடல்              “கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”

“வாரண மாயிரம் சூழ வலம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

     பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

     தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்”

v  சிறப்பு                   சூடிக்கொடுத்த சுடர்கொடி

‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்’

v  இராமானுஜர்             திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து

என்று கூறியவர்.

v  திருமங்கையாழ்வார்

v  பாடல்கள்                    1. பெரிய திருமொழி, 2. திருக்குறுந்தாண்டகம்,

3. திருநெடுந்தாண்டகம், 4. சிறிய திருமடல்,

5. பெரிய திருமடல், 6. திருவெழுக்கூற்றிருக்கை

v  ஊர்                       திருக்குறையலூர்

v  இயற்பெயர்                கலியன்

v  வேறுபெயர்கள்            ஆலிநாடன், மங்கையர்கோன், சூறையாளி,

அருள்மாரி

v  மனைவி                  குமுதவல்லி

v  பாடல்                         “வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெரும்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மொடு

அவர்தம் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்”

v  காலம்               9ஆம் நூற்றாண்டு – 2ஆம் நந்திவர்ம பல்லவன்

v  தொண்டரடிப்பொடியாழ்வார்

v  பாடல்கள்                 திருமாலை, திருப்பள்ளியெழுச்சி

v  ஊர்                       சோழநாடு

v  இயற்பெயர்                விப்பிரநாராயணன்

v  பாடல்              “அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்

அச்சுவை பெறினும்வேண்டேன் அரங்கமா நகருளானே”

v  திருப்பாணாழ்வார்                  

v  ஊர்                       உரையூர்

v  சிறப்பு                     திருமாலை இசையோடு பாடி வழிபட்டவர்

v  பாடல்              “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”

v  குலசேகராழ்வார்

v  பாடல்கள்                     முகுந்தமாலை (வடமொழி)

பெருமாள் திருமொழி - 105 (தமிழ்)

v  சிறப்பு                     சேரமன்னர்

                           தமிழ், வடமொழி புலமையாளர்      

v  பாடல்              “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே!”

“மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு                 வாய்த்தவனே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ”

v  காலம்               9ஆம் நூற்றாண்டு

v  நம்மாழ்வார்

v  பாடல்கள்                 1. திருவிருத்தம், 2. திருவாசிரியம்,

3. பெரிய திருவந்தாதி, 4. திருவாய்மொழி

v  திருவாய்மொழி            திராவிட வேதம் எனப்படுகிறது.

v  நம்மாழ்வார்               மதுரகவியாழ்வாரின் குரு

சைவத்தில் மாணிக்கவாசகர் போன்றவர்

v  ஊர்                       திருக்குருகூர்

v  பெற்றோர்                 காரிமாறன், உடைய நங்கை

v  வேறுபெயர்கள்            சடகோபன், பராங்குசன், குருகைக் காவலன்,

காரிமாறன், தமிழ்மாறன்

v  காலம்                    9ஆம் நூற்றாண்டு 

v  மதுரகவியாழ்வார்                             

v  ஊர்                       மதுரை, திருக்கோளூர்

v  வழிபாடு                  வடக்கே அயோத்திவரை சென்று வழிபட்டவர்

v  சிறப்பு                     நம்மாழ்வாருக்கு அடியவர்

v  பாடல்                     ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ எனும் பிரபந்தம்

பாடியவர்

v  வள்ளலார்

v  இயற்பெயர்                இராமலிங்க அடிகள்

v  ஊர்                       சிதம்பரம் அருகே மருதூர்

v  பெற்றோர்                 இராமலிங்கம் பிள்ளை, சின்னம்மையார்

v  நூல்கள்                   திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம்,

சீவகாருண்ய ஒழுக்கம், சிவநேச வெண்பா, மகாதேவ மாலை, நெஞ்சறிவுறுத்தல்,

இங்கித மாலை

v  மார்க்கம்                  சமரச சுத்த சன்மார்க்கம்

v  பாடல்கள்           “அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்

ஆருயிருக் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்.”

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.”

“கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்”

v  கம்பராமாயணம்

v  முதல் நூல்               வால்மீகி இராமாயணம்

v  வழி நூல்                 கம்பராமாயணம் (தழுவல் மொழிபெயர்ப்பு)

v  இராம + அயனம்          இராமரின் வரலாற்றைக் கூறுவது

v  வேறுபெயர்கள்            கம்ப நாடகம், கம்ப சித்திரம்

இராமாவதாரம் (கம்பர் இட்ட பெயர்)

v  கம்பர் பெயர்க்காரணம்    

1. காளிகோவில் கம்பத்தினடியில்                 கண்டெடுக்கப்பட்டார்.

                     2. காஞ்சி நகரத்தின் சிவனை வழிபட்டு வருவதால்.

                     3. கம்பங்கொல்லையைக் காவல் புரிந்தமையால்.

v  பிறந்த ஊர்           மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரெழுந்தூர்

v  தந்தை               ஆதித்தனார்

v  மகன்                     அம்பிகாபதி

v  ஆதரித்தவர்          சடையப்ப வள்ளல்

v  நூல் அமைப்பு        ஆறு காண்டங்கள்

1. பாலகாண்டம், 2. அயோத்தியா காண்டம்,

3. ஆரண்யகாண்டம், 4. கிட்கிந்தைக் காண்டம்

5. சுந்தரகாண்டம் 6. யுத்தகாண்டம்

113 படலங்கள், 10480 பாடல்கள்

v  முதற்படலம்         ஆற்றுப்படலம்

v  இறுதிப்படலம்        விடைகொடுத்த படலம்

v  கதை அமைப்பு      தந்தை – தசரதன், தாய்- கோசலை

வளர்ப்புத்தாய் – கைகேயி

நாடு – கோசலம், நகரம் – அயோத்தி

ஆசிரியர் – வசிட்டர்

v  தம்பியர்              பரதன், இலக்குவன், சத்துருக்கனன்

v  ஏற்றுக்கொள்ளப்பட்ட தம்பியர் – குகன், சுக்ரீவன், வீடனன்

v  தாடகை              விசுவாமித்திரர் யாகத்தைக் காக்கும் பொருட்டு

இராமனால் கொள்ளப்பட்ட அரக்கி.

v  மிதிலை             இராமன் – சீதை திருமணம் நடைபெற்ற இடம்.

v  ஜனகர்               சீதையின் தந்தை

v  மாண்டவி            பரதனின் மனைவி

v  ஊர்மிளா             இலக்குவன் மனைவி

v  சதகீர்த்தி             சத்ருக்கனின் மனைவி

v  மண்டோதரி          இராவணனின் மனைவி

v  பரதன்               கைகேயின் மகன்

v  வாலி                கிட்கிந்தையின் மன்னன், சுக்ரீவனின் அண்ணன்

v  அனுமான்            சுக்ரீவனின் அமைச்சன் (சொல்லின் செல்வன்)

v  இந்திரஜித்            இராவணனின் மகன்

v  திருவரங்கம்         கம்பராமாயணம் அரங்கேற்றிய இடம்

v  உரைகள்             வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்

v  வ.வே.சு கூற்று      இலியட், ஒடிசி, மகாபாரதம் போன்றவற்றோடு

வால்மீகியையும் விஞ்சும் காப்பியம்.

v  பாரதியார் கூற்று     “கல்வி சிறந்த தமிழ்நாடு

புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு”

v  காலம்               9ஆம் நூற்றாண்டு

v  பாடல்                   “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்”

“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க”

“தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”

“உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய             வாழ்வெல்லாம்”

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

“வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

v  கம்பரின் பிறநூல்கள்      ஏரெழுபது, திருக்கை வழக்கம்,

சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி

v  வில்லிபாரதம்

v  ஆசிரியர்                  வில்லிபுத்தூராழ்வார்

v  முதல் நூல்               வியாசரின் மகாபாரதம்

v  வழி நூல்                 வில்லிபாரதம்

v  காலம்                    17ஆம் நூற்றாண்டு

v  நூற்செய்தி                பாண்டவர், கௌரவர் வரலாறு கூறுகிறது.

v  வியாசபாரதம்             வில்லிபாரதத்திற்கு முன்னூல்

v  பிறந்த ஊர்                திருமுனைப்பாடி சனியூர்

v  சிறப்புப் பாயிரம்           வரந்தருவார் (வில்லிபுத்தூராரின் மகன்)

v  பதிப்பு                     ஆறுமுக நாவலர்

v  உரை                      கே. இராஜகோபாலன்

v  பருவங்கள்     (10)            1. ஆதிபருவம், 2. சபாபருவம்

3. வன பருவம் 4. விராட பருவம்

5. உத்யோகபருவம் 6. பீஷ்ம பருவம்

7. துரோணபருவம் 8. கர்ண பருவம்,

9. சல்லியபருவம் 10. சௌபதிக பருவம்.

v  கதையமைப்பு             

v  திருதராஷ்டிரன் – தம்பிகள் – பாண்டு, விதுரன். பாட்டன் – பீஷ்மன்

மனைவி – காந்தாரி, மகன் – துரியோதனன் உள்ளிட்ட நூற்றுவர்,

v  பாண்டு         மனைவியர் – குந்தி, மித்திரை

v  குந்தி           மகன்கள் – தருமன், பீமன், அர்ச்சுனன்

சூரியனுக்குப் பிறந்தவன் கர்ணன்

v  மித்திரை        மகன்கள்  - நகுலன், சகாதேவன்

 

v  பாடல்          கண்ணனிடம் கன்னன் வரம் கேட்பது

”…………………………………………………………………………..ஏலெழு பிறப்பும்

இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென் றுணரா

இதய நீ அளித்தருள்.”

செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல்

“செருமுனைச் சென்று செஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவே எனக்கு இனிப் புகழும்

கருமமும் தருமமும் என்றான்.”

சிறப்புப் பாயிரம்

                “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

                திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்து பேதை

                நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென

                மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்”

v  பாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.

v  பெருந்தேவனார்      தமிழில் பாரதம் பாடியவர்

v  சின்னமனூர் செப்பேடு     “மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்”

v  ஆதரித்தவர்கள்            புலவர்கள்     

பாரி                      கபிலர்  

அதியமான்                ஔவையார்

குமணன்                  பெருஞ்சித்திரனார்

சடையப்ப வள்ளல்        கம்பர்

சந்திரன் சுவர்க்கி          புகழேந்தி

சீதக்காதி                  உமறுப்புலவர்

வரபதி ஆட்கொண்டார்     வில்லிபுத்தூரார்

சித்தர் இலக்கியம்

v  சித் என்றால்         அறிவு

v  சித்தர்கள்                  உடலினை ஆன்மாக மாற்றுவதன் மூலம்

மரணமில்லா வாழ்வு வாழ்வர்

காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு யோகத்தில் நிலைப்பவர்கள்

குண்டலினி சக்தியை எழுப்பி முத்தியடைந்தவர்கள்

v  அகத்தியர்            சித்தர்களின் தலைவர்

v  சமயம்               சமரச சன்மார்க்கம்

v  அஸ்டமா சித்திகள்   1. அனிமா, 2. மகிமா, 3. கரிமா, 4. லகிமா, 5. ப்ராப்தி,

6.   ப்ராகாமியம், 7. ஈஸத்துவம், 8. வசித்வம்

v  பட்டினத்தார்         

v  இயற்பெயர்          சுவேதாரண்யர்

v  பெற்றோர்            சிவநேச செட்டியார், ஞானகலை ஆச்சி

v  ஊர்                  காவிரிப்பூம் பட்டினம்

v  பெயர்க்காரணம்      பட்டினத்து வணிகர்

v  வேறுபெயர்          திருவெண்காடர்

v  இவரின் சீடர்         பத்திரகிரியார்

v  திருவொற்றியூர்      அடக்கம் பெற்ற தலம்

v  பாடல்               “கொட்டி முழக்கி அழுவார், மயானம்குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே”

“உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே”

“முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே”

“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு”

“மெய் ஒன்றுசாரச் செவிஒன்று கேட்க விரும்பும்யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்

வினை தீர்ப்பவனே”

v  பத்திரகிரியார்

v  உஞ்சேனை மாகாளபுரத்து அரசர்

v  இவரது பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் எனப்படுகிறது.

v  235 கண்ணிகளால் பாடப்பெற்றுள்ளது.

v  பாடல்:         “ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனையும் கட்டறுத்துத்

தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது எக்காலம்”

v  இடைக்காட்டுச் சித்தர்    

v  ஊர்                  தொண்டை நாட்டு இடைக்காடு

இடையர் குலம்,

v  திருவண்ணாமலை           அடக்கம் பெற்ற ஊர்

“ஆடுமயிலே! நடமாடு மயிலே! எங்கள்

ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே

சினமென்னும் பாம்பு இறந்தால்

தாண்டவக் கோனே - யாவும்

சித்தியென்றே நினையேடா தாண்டவக் கோனே!”

v  கடுவெளிச் சித்தர்  

v  கடுவெளி என்றால் சுத்தவெளி, அதாவது பிரமம்.

v  பாடல்                   “பாவம் செய்யாதிரு மனமே – நாளை

கோபம் செய்தே எமன் கொண்டாடிப் போவான்”

“நந்தவனத்திலோர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”.

v  பாம்பாட்டிச் சித்தர்  

v  ஊர்                  பாண்டிநாட்டு கோகானம்

v  விருத்தாசலம்        அடக்கம் பெற்ற இடம்

v  பாடல்                   ”நாதர் முடிமேல் இருக்கும் நாகப்பாம்பே

நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே

”இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை

அரை காசுக்கு ஆகாது என்று ஆடு பாம்பே”

v  குதம்பைச் சித்தர்   

v  குதம்பை என்பது காதணி

v  பெயர்க்காரணம்      குதம்பை அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்தி

பாடுவதால்

v  மயிலாடுதுறை       அடக்கம் பெற்ற இடம்

v  பாடல்                   “அல்லவை நீக்கி அறிவோடு இருப்போர்க்குப்

பல்லக்கு ஏதுக்கடி? – குதம்பாய்

பல்லக்கு ஏதுக்கடி?”

“மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி – குதம்பாய்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி”

இரட்டைக் காப்பியங்கள்  சிலம்பின் தொடர்ச்சி மேகலை

v  அணிகலன்கள்       சிலம்பு, மணிமேகலை

v  சாத்தனார் கூறியது       “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகள் நீரே அருள்க”

                              சிலம்பு - பெற்றோர் பற்றிய கதை

மணிமேகலை - பிள்ளை பற்றிய கதை

சிலம்பு – இல்லறச் சிறப்பு பற்றியது

மணிமேகலை – துறவறச் சிறப்பு பற்றியது

v  இரண்டிலும்          ஒரு குடும்பக் கதை, முப்பது காதைகள்,  

பெண் தலைவி, இந்திரவிழா, மணிமேகலா தெய்வம், ஊழ்வினை, நிலைமண்டில ஆசிரியப்பா

“பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”

சமணம்

v  சிலப்பதிகாரம்        இளங்கோவடிகள் - சேரன் செங்குட்டுவனின் தம்பி

துறவு                குணவாயிற்கோட்டம்

காலம்               கி.பி 2

வேறு பெயர்கள்      உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்,

முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்

   உரை                அரும்பத உரை (பழைய உரை)

அடியார்க்கு நல்லார் உரை

கதைமார்ந்தர்கள்

கோவலன்           கண்ணகி (மனைவி)

                           மாடலன் (நண்பன்)

     மாதவி               வயந்தமாலை (தோழி)

     சமணத்துறவி        கவுந்தியடிகள்

     பௌத்தத் துறவி     அறவணடிகள்

     ஆயர்குலப் பெண்    மாதரி

பெற்றோர்            கோவலனின் தந்தை – மாசாத்துவான்

கண்ணகியின் தந்தை – மாநாய்கன்

தேவந்தி             கண்ணகியின் தோழி

கண்ணகி கோயிலின் முதல் பூசாரி

இமயமலை          கண்ணகி சிலைக்கு கல் எடுக்கப்பட்ட இடம்

திருவாஞ்சிக்களம்    கண்ணகி கோயில் உள்ள ஊர்.

பரதன்               முற்பிறவியில் கோவலன்

சங்கரன்             நீலி (மனைவி)

கோவலனால் ஒற்றன் எனக் கூறப்பட்டு

கொல்லப்பட்டவன்.

v  மதுராபதி            மதுரையின் காவல் தெய்வம்

v  செங்குட்டுவன்       கண்ணகிக்குக் கோயில் கட்டினான்

வேண்மாள் (மனைவி)

v  இந்திர விழா         மழை வேண்டி 28 நாட்கள் எடுக்கப்படும் விழா

v  மணிமேகலை        கோவலனின் குல தெய்வம்.

v  மாணிக்கங்கள்      கண்ணகியின் சிலம்பு

v  முத்துக்கள்           அரசியின் சிலம்பு    

v  நூலமைப்பு          

v  காண்டங்கள் (3)      புகார்க் காண்டம் (10)  – சோழ நாடு

மதுரைக் காண்டம் (13) – பாண்டிய நாடு

வஞ்சிக் காண்டம் (07) – சேர நாடு

     புகார்க் காண்டம்           மங்கல வாழ்த்து முதல் நாடுகாண் காதை வரை

     மதுரைக் காண்டம்   காடுகாண் முதல் கட்டுரைக் காதை வரை

     வஞ்சிக் காண்டம்    குன்றக் குரவை முதல் வரந்தரு காதை வரை

v  காதைச் சிறப்புகள்

அரங்கேற்றுக் காதை இசைக் கலை, ஆடல் கலை பற்றியது

துளைக் கருவிகள்    1. ஆம்பலங்குழல், 2. கொன்றையங்குழல்

நரம்புக் கருவிகள்    1. மகர, 2. சகோட, 3. பேரி, 4. செங்கோட்டியாழ்

தோற்கருவிகள்      1. சல்லிகை, 2. ஆவஞ்சி, 3. இடக்கை, 4. கரடிகை

பண்கள்              1. செம்பாலை, 2. படுமலைப்பாலை,

3. கோடிப்பாலை, 4. விளரிப்பாலை

கூத்து                1. அகக் கூத்து, 2. தேசிகக் கூத்து,

அரங்க அமைப்பு           1. ஒருமுக எழினி, 2. பொருமுக எழினி

3. கரந்துவரல் எழினி

இந்திர விழாவூரெடுத்த காதை – காவிரிப் பூம்பட்டினச் சிறப்பு

வரி                  பாடல் என்று பொருள் எ.கா கானல் வரி, ஊசல் வரி

வேட்டுவ வரி        பாலை நில மக்களைப் பாடுவது

கானல் வரி          நெய்தல் நில மக்களைப்பாடுவது

கந்துக வரி                பந்தடிக்கும் போது பாடுவது

ஆய்ச்சியர் குரவை   முல்லை நில மக்களின் கூத்து

குன்றக் குரவை      குறிஞ்சி நில மக்களின் கூத்து

துணங்கைக் கூத்து   ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆடுவது

வள்ளைப் பாட்டு     உலக்கையால் இடுத்துப் பாடுவது

கொடுகொட்டி        முப்புரம் எரிந்த சிவன் ஆடுவது

பாண்டரங்கன்        சிவன் – பார்வதி சேர்ந்து ஆடுவது

அல்லியத் தொகுதி   கம்சன் அனுப்பிய யானையக் கொல்ல

கண்ணன் ஆடியது

     மல்லின் ஆடல்      வாணாசுரனை அழிக்க கண்ணன் ஆடியது

     துடி ஆடல்                சூரனை வென்று முருகன் ஆடியது

     பேடி ஆடல்          காமன் ஆடுவது

     மரக்கால் ஆட்டம்    (பொய்க்கால் ஆட்டம்) துர்க்கை (காளி) ஆடுவது

     பாவை ஆடல்        திருமகள் ஆடுவது

    

v  பட்டங்கள்

காவிதி, எட்டி        வணிகர்களுக்கு வழங்கப்படும் பட்டம்

ஏனாதி               படை வீரர்களுக்கு வழங்குவது.

v  கோட்டங்கள்

ஊர்க்கோட்டம்            சிவன் கோயில்

புறம்பணையான் கோட்டம்      மாசாத்தான் கோயில்

வேற்கோட்டம்            முருகன் கோயில்

நிக்கந்தக் கோட்டம்        அருகன் கோயில்

அமரர்தருக் கோட்டம்      கற்பக மரம் இருக்கும் கோயில்

v  மேற்கோள்

நற்றினை (216) வரி   “ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி”

கண்ணகி கதை       வைசிய புராணம் 32ஆம் சருக்கம்        

கோவிலன் கதை     புகழேந்திப் புலவர்                   

பாரதியார்            “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”

“யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல்

வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

ஊ. வே.சா      -     சிறப்பதிகாரம் என்கிறார்.

 

v  சிலம்பு தரும் சில செய்திகள்

1.    சேரர் விற்பொறியை இமையத்தில் பொறித்தமை

2.    “குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து

பாலையென்பதோர் படிவம் கொள்ளும்”

3.    “முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்”

4.    கூத்து –    1. வேத்தியல், 2. பொதுவியல்

6.    “பஃறுளி யாற்றுடன் பன் மலையடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

                7.    புகார் நகர் – 1. மருவூர்ப் பாக்கம், 2. பட்டினப் பாக்கம்

                8.    அங்காடி   1. நாளங்காடி, 2. அல்லங்காடி

                9.    குழு – 1. ஐம்பெருங்குழு, 2. எண்பேராயங்குழு

v  பாடல்               மூன்று உண்மைகள்

1)   “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்

(பாண்டிய மன்னன் உயிர்துறத்தல்)

2)   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

(கண்ணகி தெய்வமாதல்)

3)   ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”

(கோவலன் கொல்லப்படுதல்)

     மாதவி               “நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்”

                           "மாலை வாரார் ஆயினும் காலைகாண்குதும்”

     கவுந்தியடிகள்        “முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகு”

“இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்”

சீவகசிந்தாமணி                  திருத்தக்கத் தேவர்

     திருத்தக்கத் தேவர்   நரி விருத்தம் – நிலையாமை பற்றியது

     சிறப்புப் பெயர்       மணநூல், காம நூல், முக்தி நூல்

     வீரமாமுனிவர்       ‘திருத்தக்கத் தேவர் தமிழ்க் கவிஞர்களுள் அரசர்’

     அடியார்க்கு நல்லார்  ‘முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’

     ஜி.யு. போப்          தமிழிலக்கிய ‘இலியட்’, ‘ஒடிசி’

பா                   விருத்தப்பா

காலம்               கி.பி. 9ஆம் நூற்றாண்டு

உரை                நச்சினார்க்கினியர்

பதிப்பு                உ. வே. சா

     வடமொழி தழுவல்   கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி

மனைவியர் (8)       1. காந்தருவதத்தை, 2. குணமாலை, 3. பதுமை,

4. கேமசரி, 5. கனகமாலை, 6. விமலை, 7. சுரமஞ்சரி, 8. இலக்கணை.

v  இலம்பகங்கள் (13)    நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை

1. நாமகள் இலம்பகம்                 சீவகனின் கல்வி

2. காந்தர்வதத்தையார் இலம்பகம்     யாழ் மீட்டி மணத்தல்

3. குணமாலையார் இலம்பகம்        மதயானையை அடக்கி மணத்தல்

4. பதுமையார் இலம்பகம்             பாம்பின் விடம் நீக்கி மணத்தல்.

5. கேமசரியார் இலம்பகம்             காதல் கொண்டு மணத்தல்

6. கனகமாலையார் இலம்பகம்        வில்வித்தை கற்பித்து மணத்தல்

7. விமலையார் இலம்பகம்      பந்து விளையாடிய விமலையை மணத்தல். காகதத்தன் (தந்தை)

8. சுரமஞ்சரியார் இலம்பகம்     கிழவன் வேடமணிந்து மணத்தல்.

     9. இலக்கணையார் இலம்பகம்   மாமன் மகளை மணத்தல்

10. கோவிந்தையர் இலம்பகம்    நண்பன் பதுமுகனுக்கு மணமுடித்தல்

11. மண்மகள் இலம்பகம்        சீவகன் நாட்டை மீட்டல்

12. பூமகள் இலம்பகம்            முடிசூடி ஆட்சி செய்தல்

     13. முக்தி இலம்பகம்            சீவகன் வீடுபேறு அடைதல்.

v  கதைமாந்தர்கள்

நாடு                 ஏமாங்கத நாடு

தலைநகர்            இராசமாபுரம்

கதைத் தலைவன்    சீவகன் (பிறந்த இடம் – இடுகாடு)

வளர்ப்புத் தந்தை     கந்துக்கடன் (வணிகன்)

     அச்சணந்தி           சீவகனின் ஆசிரியர்

மன்னன்             சச்சந்தன்

அரசி                 விசையை

அமைச்சன்                கட்டியங்காரன்

பதுமுகன்            சீவகனின் நண்பன்

v  சூளாமணி           

ஆசிரியர்             தோழாமொழித்தேவர்

இயற்பெயர்          வர்த்தமான தேவர்

வேறு பெயர்         சூடாமணி

சிறப்பு               பெருங்காப்பியத்திற்கு இணையானது

சருக்கங்கள் (12)      நாட்டுச் சருக்கம் முதல் முத்திச் சருக்கம் வரை

கதைத் தலைவர்கள்  பயாபதி பிள்ளைகள்

திவிட்டன் – கண்ணன் அவதாரம்

விசயன் (தம்பி) – பலராமன் அவதாரம்

                     சோதிமாலை (மகள்)

மையக் கருத்து      ஊழ்வினைக் கோட்பாடு

பெயர்க்காரணம்      பயாபதி மன்னன் ‘உலகின் முடிக்கோர் சூளாமணியானான்.’

கதையமைப்பு        மன்னக மன்னன் திவிட்டன், வின்னக மங்கை சயம்பவையை மணந்த கதை மற்றும் விசயனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

தோற்றக் காரணம்   கார் வெட்டி விசயன் எனும் பல்லவ மன்னனின் விருப்பத்திற்கிணங்க இயற்றப்பட்டுள்ளது.

                     சேந்தன் தமிழ்க் கிழவன் என்பவரின் தலைமையில் அரங்கேரியுள்ளது.

தழுவல்              ஆருகத மாபுராணம்

முதல் பதிப்பு         சி.வை. தாமோதரன் பிள்ளை

வரலாற்றுச் சான்று  சிரவணபெல்கோலா கல்வெட்டில் தோலாமொழித்தேவர் பற்றிய குறிப்பு உள்ளது.

பாடல்               “ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி

                     நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்

                     தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

                     மானுடன் இன்பம் மதித்தனை கொள் நீ”

v  நீலகேசி               ஆசிரியர் பெயர் தெரியவில்லை

நீலி (அரசி)கருமையான கூந்தலை உடையவள்

தமிழின் முதல் தருக்க நூல்

      சருக்கம்             10

குண்டலகேசிக்கு எதிரான மறுப்பு நூல்

கதையமைப்பு        முனிச்சந்திரரின் தவத்தைக் கலைக்கும் முயற்சியில் தோற்று அவருக்கே மனைவியாகிறாள் நீலி.

பழையனூரில் பேயுருவில் வாழ்ந்தவள்

பௌத்தம்

v  மணிமேகலை        மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை        கோவலன் – மாதவியின் மகள்

v  காதை (30)           விழாவரைக் காதை முதல் பவத்திற மறுகெனப்

பாவை நோற்றக் காதை வரை

v  வேறு பெயர்கள்      துறவுக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம்,

அறக்காப்பியம், புரட்சிக் காப்பியம்

வ.சு.ப மாணிக்கம்    ‘பரத்தமை ஒழிப்பு, மது ஒழிப்பு, சிறையொழிப்பு, சாதியொழிப்பு பற்றிப்பேசும் சமூகச் சீர்திருத்தக் களஞ்சியம்.’

v  கதைமாந்தர்கள்

மணிமேகலை        மாதவியின் மகள்

                     பிறப்பு – பூம்புகார், மறைவு – காஞ்சிபுரம்

                     உதயகுமாரனால் விரும்பப்பட்டவள்

சுதமதி               மணிமேகலையின் தோழி

சாதுவன்             ஆதிரையின் கணவன்

ஆதிரை              மணிமேகலைக்கு (அட்சயப் பாத்திரம்) அமுத சுரபி  முதன் முதலில் பிச்சையிட்டவள்

காய சண்டிகை       மணிமேகலைக்கு ஆதிரையின் வரலாற்றைக் கூறியவள்.

                     விருச்சிக முனிவரிடம் பசிநோய் சாபம் பெற்றவள்

                     மணிமேகலையால் பசிநோய் நீங்கப் பெற்றாள்

மணிமேகலா தெய்வம்     மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்றது.

சிந்தா தேவி               அமுத சுரபியை ஆபுத்திரனுக்குக் கொடுத்தது

ஆபுத்திரன்                அமுத சுரபியை கோமுகியில் இட்டவன்

தீவதிலகை                மணிமேகலைக்கு அமுத சுரபி பற்றிக் கூறியது

v  சிறப்புகள்           

உவவனம்            மணிமேகலை பூப்பறிக்கச் சென்ற இடம்

சம்புத் தீவு           நாவலந்தீவு (வேறுபெயர்)

சக்கரவாளக் கோட்டம்     சுடுகாடு

v  பாடல்கள்

நிலையாமை         “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா

புத்தே ளுலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணையாவது”

     பசிப்பிணி            “குடிபிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

                           பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

                           நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்”

     பசிப்பிணி நீக்கல்     “காணார் கேளார் கால்முடப் பட்டோர்

                           பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்

                           யாவரும் வருகவென்று இசைத்துடன் ஊட்டி”

                           “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

                           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

     அறம்                “அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்

                          மறவாது இதுகேள்! மன்னுயிர்க்கு எல்லாம்

                           உண்டியும் உடையும் உறையும் அல்லது

                           கண்டது இல்.”

v  குண்டலகேசி         நாதகுத்தனார்

காலம்               கி.பி 8ஆம் நூற்றாண்டு

கதைத் தலைவி      இராசகிருக நாட்டு மந்திரியின் மகள் ‘பத்திரை’ கொலைதண்டனைக்குரிய கள்வனை (காளன்) மணக்கிறாள்.

தற்கொல்லியை முற்கொன்றவள்

சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்று புத்தம் ஏற்கிறாள்.

     திரைப்படம்          மந்திரிகுமாரி – கலைஞர் மு. கருணாநிதி

     பாடல்          நிலையாமை

                     “பாளையாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்

                     காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும்

                     மீளுமிவ் வியல்பு மின்னே! மேல்வரும் மூப்பு மாகி

                     நாளுநாட் சாகின்றோமால்; நமக்குநா மழாத தென்னெ!”

v  இசுலாம்

v  சீறாப்புராணம்  உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர்)

                கவிகளஞ்சியப் புலவருடைய மகன்)

ஊர்            கீழக்கரை

ஆசிரியர்       கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்றவர்

கதை           முகமது நபியின் வாழ்க்கையை விளக்குகிறது.

பதிப்பு          சேகணாப் புலவர்

முகமது நபி    கதீஜாபீவி (மனைவி), பாத்திமா பீவி (மகள்)

உமறுப்புலவர்   முதுமொழி மாலை (பிற நூல்)

சீறா            வாழ்க்கை என்று பொருள்

புராணம்        புனிதக் கதை (வரலாறு)

காண்டம் (3)    1. விலாதத்து (பிறப்பு), 2. நுபுவத்து (தரிசனம்)

3. ஹிஜ்ரத்து (இடம் பெயர்தல்) படலம் 92

சின்னச்சீறா     பனு அகமது மரைக்காயர்

பாடல்          “திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய்த்

                தெளிவினும் தெளிவாய் சிறந்த

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்

                மதித்திடாப் பேரொளி அனைத்தும்

பொருளினும் பொருவா வடிவினும் வடிவாய்

பூதலத்து உறைந்த பல்லுயிரின்

கருவினுங் கருவாய் பெருந்தலம் பரந்த

கருத்தனைப் பொருத்துதல் கருத்தே”

     ஆதரித்த வள்ளல்    -     சீதக்காதி, அப்துல்காசிம் மரக்காயர்

v  குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

இயற்பெயர்     சுல்தான் அப்துல் காதர் லெப்பை ஆலிம் (1788 – 1835)

இசுலாமியத் தாயுமானவர்

     சிறப்புப் பெயர்  மெய்ஞ்ஞானப் பாடல்கள் பாடும் ‘சூபிப் புலவர்’

     காலம்          கி.பி. 17

     பா              விருத்தப்பா

     ஊர்            இராமநாதபுர மாவட்டம், குணங்குடி

     தொகுத்தவர்    சீயமங்கலம் அருணாசல முதலியார்

பாடியவை      பராபரக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி,

நிராமயக் கண்ணி, ரஹ்மான் கண்ணி

பிரிவுகள்       1. முகியீத்தின் சதகம், 2, அகத்தீசர் சதகம்,

3. கண்ணிப் பாடல்கள்

     மஸ்தான் பாடல்களில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்தக் கோட்பாடுகள்

     1. சலோகம்     கடவுளுடன் ஓரிடத்தில் உறைதல்.

     2. சாமீபம்       கடவுளை அணுகி இருத்தல்.

     3. சாரூபம்      கடவுளைப் போல் வடிவம் பெறுதல்

     4. சாயுச்சியம்   சீவான்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலத்தல்.

பாடல்          “எப்பொழுதும் உன்பதத்தில் என்கருத்தே எய்தலுக்கு

                இப்பொழுதே கைப்பிடித்தேன் இறையே பராபரமே”

                “ஈறும் முதலும் அற்ற இயங்குகின்ற முச்சுடராய்

                காரணிக்கும் பூரணமே கண்ணே ரஹ்மானே”

சேகணாப் புலவர்    ‘குத்பு நாயகம்’ எனும் புராணம்.

                     திருமணிமாலை எனும் காப்பியம்

                     நாகையந்தாதி, மக்காக் கலம்பகம்

சவ்வாதுபுலவர்       நாகைக் கலம்பகம், மதீனத்து அந்தாதி,

                     மொஹைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்.

                     வசைபாடுவதில் பெயர் பெற்றவர்.

வண்ணக் களஞ்சியப் புலவர்    இராசநாயகம்

(சுலைமான் நபியின் வரலாறு)

தீன் விளக்கம்

     செய்குத் தம்பி பாவலர்          சதாவதாணி

    

v  கிறிஸ்தவம்

v  வீரமாமுனிவர்             தேம்பாவணி  

காலம்                    கி.பி. 17

பா                        விருத்தப்பா

இயற்பெயர்               கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி

வேறு பெயர்              தைரிய நாதர்

சிறப்புப் பெயர்             உரைநடை முன்னோடி,

அகராதிகளின் முன்னோடி,

செந்தமிழ்த் தேசிகன்

 

சிற்றிலக்கிய நூல்கள்      திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல நாயகி வெண்கலிப்பா, அன்னை அழுங்கல் அந்தாதி,

கருணாகரப் பதிகம்.

உரைநடை நூல்கள்       ஞானக் கண்ணாடி, வேத விளக்கம்,

வேதியர் ஒழுக்கம்

இலக்கன நூல்கள்         தொன்னூல் விளக்கம் (ஐந்திலக்கணம்) – (குட்டித் தொல்காப்பியம் எனப்படுகிறது), செந்தமிழ் இலக்கணம்,

கொடுந்தமிழ் இலக்கணம் (பேச்சுத் தமிழ் வழக்கு பற்றியது)

அகராதி                   சதுரகராதி (சதுர் என்றால் நான்கு அவை

1. பெயர், 2. பொருள், 3. தொகை, 4. தொடை)

தமிழின் முதல் அகராதி

சுத்தானந்த பாரதியார்      தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை என்று தேம்பாவணியை வாழ்த்தியுள்ளார்.

பூரணலிங்கம்பிள்ளை      சிந்தாமணிக்கு இணையான காப்பியம்,

தேம்பாவணி              இயேசுவின் தந்தை சூசையப்பரின் பெயர்

தலைப்பு             1. தேம்பா – வாடாத, அணி – மாலை. வாடாதமாலை

2. தேம்+பா+அணி= தேனை ஒத்த பாக்களால் ஆன அழகிய நூல் என்று பொருள்.

காண்டம் 3, படலம் 36

உள்ளடக்கம்         காப்பியத் தலைவன் – சூசை (வளன்),

மனைவி – மரியாள்,  மகன் – இயேசு

v  இயேசு காவியம்     கண்ணதாசன்

பாகம் (5)             1. இயேசுவின் பிறப்பு, 2. இயேசுவின் ஆன்ம தயாரிப்பு 3. பொதுவாழ்வு 4. பாடுகள், 5. இயேசுவின் உயிர்த்தெழுகை

பாடல் (பாயிரம்)      “எங்குமே பரவி எங்ஙணும் விளங்கும்

                     இயேசுவின் வாழ்க்கையைத் தொகுத்து

                     இவ்வணம் தமிழில் தந்துவைத்தேன் யான்”

“எத்தனை தலைமயிர்கள் உம் தலையில் உள்ளதென

எண்ணி விட்டான் ஈசுவரனே – இங்கு அத்தனைக்கும் தந்தையவன் தத்துவமாய் நின்றிருப்பான்

விட்டுவிடு யாவும் அவனே.”

v  ஹச். ஏ. கிருஷ்ணபிள்ளை – 1827 – 1900 (கிறித்துவக் கம்பர்)

ஹென்றி ஆல்ஃபிரெட் கிருஷ்ணபிள்ளை

நூல்கள்              இரட்சண்ய யாத்ரிகம், இரட்சண்ய மனோகரம் 

                     இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்ய குறள்.

கருத்து              கிறித்துவன் ஒருவன் உலகத்து பாவ வாழ்விலிருந்து விடுபட்டு பேரின்ப வீடுபேற்றை அடைகின்றான். அவனை குருவானவர் நல்வழிப்பாதையில் நெறிப்படுத்துகிறார்.

தழுவல்              இரட்சண்ய யாத்ரிகம் ஆங்கிலத்தில் ஜான்பனியனின் (Pilgrims progress) நூலின் மொழிபெயர்ப்பு ஆகும்.

இரட்சண்ய மனோகரம்     கிறித்தவர்களின் தேவாரம் எனப்படுகிறது.

பாடல்               “கண்டனன் கருணையின் உருவைக் கண்களால்

                     உண்டனன் செவிவழி உரைசஞ் சீவியைப்

                     பண்டைநல் உணர்வுவந்து அணுகாப் பாங்குறும்

                     கொண்டலை இருகரம் குவித்து இறைஞ்சியே”

                     இப்படலானது இராமாயணத்தில் உள்ள

“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்” எனும் கம்பனின் வரிக்கு இணையாக அமைந்துள்ளது.

     இராபர்ட்-டி-நொபிலி  தத்துவப் போதகர்,

                           தமிழ் – போர்த்துகீசு அகராதி

     நூல்கள்              மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம்,

ஞானோபதேச காண்டம், ஏசுநாதர் சரித்திரம்,

சுகுண விவரணம், நித்திய ஜீவ சல்லாபம்

ஞான தீபிகை, தத்துவக் கண்ணாடி தீபிகை.

     சீகன் பால்கு         1790 தரங்கம்பாடி (அச்சுக் கூடம்) வந்தார்

                           எல்லப்பாவிடம் தமிழ் பயின்றார்.

     நூல்கள்              வேத உதாரணத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்

                           தமிழ் ஞான நூல்

கால்டுவெல்         நாடு - அயர்லாந்து

நூல்கள்              திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

நற்கருணைத் தியானமாலை, தாமரைத் தடாகம், ஞான ஸ்நானம்

     சிறப்புப் பெயர்       இலக்கிய வேந்தர் (சென்னைப் பல்கலை)

                           வேத விற்பன்னர் (ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி)

     வேதநாயக சாஸ்திரியார்   பெத்லகேம் குறவஞ்சி, பட்டணப் பிரவேசம்

                           ஞானத்தச்சன் நாடகம்

     தேவநேயப் பாவாணர்           இசைத் தமிழ் சரித்திரம்

     சிறப்பு                     மொழிஞாயிறு எனப்பட்டார்.