சமூகம் என்பது நாலு பேர் – தினமணிக் கதிர், 1967
முத்துவேலர் தனது நண்பன் வைத்தாவின் ஞாபகமாக பேராசிரியர் ஸ்ரீ வைத்தியநாத ஐயர்
நூல் நிலையத்தைத் திறந்து வைத்திருந்தார். சிறுவயதிலேயே முத்து வேலருக்கும் பாக்கியத்தம்மாளுக்கும்
திருமணமாகிவிட்டது. தற்பொழுது இவரது வயது 50. இறுதிவரை இருவருக்குமான
முரண்பாட்டில் மனநிறைவின்றி வாழ்ந்து வந்தனர். இவர்களின் மகள் வத்சலா,
மகன் சுந்தரலிங்கம். பாக்கியத்தம்மாளுடனான முரண்பட்ட
வாழ்வில் சளிப்புற்ற முத்து வேலர் இரண்டாவது மனைவியாக தாட்சாயினியை திருமணம்
செய்தார். தந்தையின் பெயரில் பள்ளிக்கூடம் துவங்கினார். நண்பனுக்காக தொடங்கப்பட்ட
அந்த காலத்திலேயே ‘வைத்தா’ நிமோனியா காய்ச்சல் கண்டு பல நாட்களாக அவதிப்பட்டு இறந்து போனான். நூலகம் முழுவதும் அவனது நினைவே முத்துவேலரைச்
சுற்றிவந்து, 50 கால இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலையில் முத்துவேலரின்
பள்ளியில் ஆசிரியையாக பணியாற்ற வந்தவள் சுகுணா. மிகவும் திறமைசாலி அவளின் பேச்சு,
பழக்க வழக்கங்கள் முத்துவேலரைக் கவர்ந்தன. அந்தப் பள்ளியில்
ஒரு மாணவன் மாணவிக்கு எழுதிய காதல் கடிதத்தைக் காரணம் காட்டி தலைமையாசிரியர் அவனை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதை
சுகுணா எதிர்த்தாள். எனவே சுகுனாவைப் பற்றி
முத்துவேலரிடம் புகார் சென்றது. ஒரு மாணவன் மாணவியிடம் காதலைத் தெரிவிப்பது
எவ்விதத்திலும் அநியாயம் அன்று என வாதாடிய சுக்குணாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்தார் முத்துவேலர். வார இறுதியில் தனியாக
சந்தித்து வந்த இருவரும் இறுதியில் தனித்து வாழத் தலைப்பட்டனர். அந்த வகையில்
இத்தனையாண்டு காலம் சம்பாதித்த சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பிரித்துக்
கொடுத்துவிட்டு சுகுணாவுடன் தனித்து வாழ
விரும்பினார். முத்துவேலரின் பிள்ளைகள் சுகுணாவிடம் முறையிட்டதன் பேரில் சுகுணா முத்துவேலருடன் தனித்து வாழ மறுத்து
விட்டாள். மற்ற பெண்களைப் போல இவளும் சமூகம் எனும் நாலு பேர் கூறிய சமூக ஒழுக்க
நெறிகளுக்குள் கட்டுப்பட்டவள்தான் என்றே நினைத்துக் கொண்டார் முத்துவேலர். தூக்கம்
வராமல் தவித்துக் கொண்டிருந்த அவருக்கு தூக்க மாத்திரைகளே நிரந்தரத் தூக்கத்தைக்
கொடுத்தன. (இறந்து விட்டார்)