ஞாயிறு, மே 10, 2020

ரிஷி மூலம் - ஜெயகாந்தன்

      ரிஷி மூலம் தினமணிக் கதிர், 1969
கிருஷ்ணய்யருக்கு இரண்டு மகன்கள் 1. ரகுபதி 2. இராஜாராமன் என்கிற அம்பி. இரண்டாவதான அம்பி சாமியாராகிவிட்டார். கிருஷ்ணய்யரின் மகள் ஜகதாவின் கணவர் அம்பியை அடையாளம் கண்டு அழைத்து வந்தார். அம்பி வரும் முன்பாகவே கிருஷ்ணய்யர் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். குருஷ்ணய்யரின் நண்பர் சாம்பு ஐய்யர். சிதம்பரத்தில் ஹோட்டல் வைத்துள்ளார். மாதம் ஒருமுறை கிருஷ்ணய்யரைப் பார்க்க வந்துவிடுவார். ராஜாராமன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சாம்பு அய்யர் வீட்டில் தங்க வைத்துக் கல்லூரி அனுப்பினர். குழந்தை இல்லாத சாம்பு ஐயருக்கும் சாரதா மாமிக்கும் ராஜாராமின் வருகை ஆறுதலாயிருந்தது. படிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றுவிடுவானே என்ற அச்சத்தில் இருவரும் புலம்ப, இராஜாராமன் எங்கும் செல்லாமல் தொலைந்து விட்டான். அவனைக் கண்டறிய முடியாமல் காலப்போக்கில் சாம்பு அய்யரும் இறந்துவிட்டார். ஜோசியரிடம் கேட்டபோது அவன் ரிஷி ஆகிவிட்டான் என்றார் அவர். கொல்கத்தாவில் கண்டறியப்பட்ட இராஜாராமனை ஊருக்கு அழைத்து வந்தனர். அங்கு ரிஷியாக அறியப்பட்ட அவன் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி எந்நேரமும் புகைத்துக் கொண்டிருந்தான். நான் வேறு இராஜாராமன் வேறு நான் தனக்குள் இரண்டுபட்டதாக உணர்ந்தான். இத்தனை காலம் வேஷம் போட்டுக் கொண்டதாகவும் தற்பொழுதே அத்தனை வேஷத்திலிருந்து விடுபட்டு விட்டதாகவும் உணர்ந்தான். விலங்குகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்கள் முட்டாள்கள் என எண்ணினான். தனது குழந்தை பிராயத்தை நினைத்துப் பார்க்கிறான். தாய் இந்துஅனைவரையும் திட்டிக் கொண்டேயிருப்பாள். அவளது அறை எப்பொழுதும் மூடியேயிருக்கும் அதைப் பார்க்க உள்ளே சென்ற இராஜாராமன் குளித்துவிட்டுத் திரும்பும் தாய்க்குப் பயந்து கட்டிலுக்குக் கீழே ஒழிந்து கொண்டான். ஆடைகளைக் களைந்த நிலையில் நின்ற தாய் இராஜாராமைப் பார்த்து விட்டாள். அவனைத் திட்டி அனுப்பிவிட்டாள். அதற்குப் பரிகாரமாக அவன் கடவுளிடம் பரிகார முறையில் மன்னிப்புக் கேட்டிருக்கிறான். தாய் இறந்த பிறகு இராஜாராமின் கனவில் ஆடையின்றி வரத் தொடங்கினாள். கனவிலே இருவருக்குமான உறவு நீடித்தது. கனவில் இன்பமாக இருந்தாலும் விழித்தவுடன் கொடூரமாக இருந்தது. சாரதா மாமியை பார்த்த பிறகு சாரதா மாமி கனவில் வரத் துவங்கினாள். இவ்வாறு மாமியுடன் ஏற்பட்ட கனவுலகத் தொடர்பு அவனுக்கு மிகவும் இன்பம் தருவதாகவே இருந்தது. ஆனால் இருவருக்குமான அன்புப் பரிமாற்றத்தில் அவன் குழந்தையாகவும் மாமி தாயாகவும் திகழ்ந்தனர். கிருஷ்ணய்யர் இறந்ததற்குக் கூடச் செல்லாத நிலையில், இராஜாராமன் வந்ததைக் கேள்விப்படு சாரதா மாமி இராஜாராமனைப் பார்த்து பேசி அவனை மனம் மாற்றி விட வேண்டும் என்றே நினைத்து வந்தாள். அவளை அடையாளம் தெரிந்தும் கூட அவள் கூறுகின்ற எந்த வார்த்தையையும் உள் வாங்காது அமர்ந்திருந்தான் இராஜாராமன். சாரதா மாமி குழந்தை என்று அவனை அழைத்தது உங்கள் குழந்தை இராஜாராமன் அந்தக் கரையில் எரிந்து கொண்டிருக்கிறான். உங்கள் சொத்துக்களை அதிலே போட்டு எரித்து விடுங்கள் என்று கூறிவிட்டு புகைத்தவாறு சிரித்தான் அவன்.