ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன – ஆனந்த விகடன்,
1989
அலங்கார வல்லியம்மாளின் கணவர் 25 ஆண்டுகளுக்கு
முன்பே இறந்துவிட நான்கு குழந்தைகளையும் தனி ஆளாக இருந்து வளர்த்து படிக்க வைத்து
பெரியவர்களாக்கியிருக்கிறாள். தன் பிள்ளைகளும் தன்னைப் போன்று திருமணம் செய்து கெட்டுப்
போகக் கூடாது என விரும்பினாள். எல்லோரும் வேலைக்குச் சென்றவுடன் வீடு திரும்புவர்.
அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் கூறிவிடுவர். மறுநாள் காலை கூடாரத்தைத் திறந்தது
போன்று வேலைக்குச் செல்லத் துவங்குவர். சில நேரங்களில் ஒருவருக்கொருவர்
சண்டையிடுவதும் உண்டு. தாய் அழுதால் அனைவரும் சமாதானமாகிவிடுவர். அவர்களுக்கு
அம்மாதான் உலகம். ஒரு நாள் அம்மா வெளியே சென்ற பொழுது வீட்டில் தனியாக இருந்த
ஜானகி தன்னுடன் பயின்ற தற்பொழுது போட்டோகிராபராக இருக்கின்ற சுந்தரத்தை வீட்டிற்கு
தேநீர் விருந்திற்காக அழைக்கிறாள். அவன் வந்ததும் தன்னை ஒருவன் காதலித்ததாகவும்
அவன் தன்னை முத்தமிடுவதற்காக தனியாக அழைத்ததாகவும் அதனாலேயே அவனுடன் பேசுவதை
நிறுத்தி விட்டேன் என்று கூறுவதுடன் நீங்க அப்படிப்பட்டவரில்லை எனவும் கூறிக்
கொள்கிறாள். தன்னைப் பந்துபோல் தூக்கிப் போட்டு அனைவரும் வாலிபால் விளையாடியது
போன்று கனவு கண்டதாகவும் கூறினாள். அவன் சென்ற பிறகு வீட்டிற்கு வந்த அம்மாவிடம்
சுந்தரம் என்பவர் வந்தார். நீங்கள் இல்லை என்றதும் உடனே சென்றுவிட்டார் எனவும்
கூறினாள். மொட்டைமாடியில் இரண்டு டீ கப் இருந்ததைக் கண்ட ஆடலரசன் அவன் இன்னும்
இங்குதான் இருக்கிறான் என சந்தேகப்பட்டு ஜானகியிடம் சண்டைக்கு வருகிறான்.
சுதந்திரத்தை அழைத்துப் பேச விரும்பிய அலங்கார வள்ளியம்மாள், அவனிடம் பேசிய பிறகு பையன் நல்ல குணமுடையவன் என சான்றளித்தாள். அப்பொழுது
சுந்தரத்திடம் தான் இளமையிலேயே விதவையாகி விட்டதையும், தன்னுடைய
மூத்த மகன் முத்து மாணிக்கத்திற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் அவனுடைய
வாழ்வும் சீரழிந்து போய்விட்டதையும் பற்றிக் கூறி அதனாலேயே என் பிள்ளைகளை
என்னுடனையே வைத்துக் கொள்கிறேன் என்றாள். அதனைத் தொடர்ந்து பல சந்திப்புகளில்
ஜானகியும் சுந்தரமும் சந்தித்துப் பழகினார். ஒரு நாள் ஜானகி வீட்டிற்கு வருகையில்
அலங்கார வள்ளியம்மாள் கடற்கரை பீச்சிற்குப் போனியா என்றாள். அவளும் ஆம் என்றாள்.
உடனே ஜானகியின் கற்பின் மீது ஆடலரசன் சந்தேகம் கொண்டான். இதனால் ஏற்பட்ட சச்சரவில்
சுந்தரத்தை அழைத்துப் பேசுவது என வள்ளியம்மாள் முடிவு செய்தாள். இதற்கிடையில்
மூத்த மகன் முத்து மாணிக்கம் வீட்டிற்கு வந்திருந்தான். வல்லியம்மாளின் அழைப்பின்
பேரில் சுந்தரம் வீட்டிற்கு வந்தான். முதலில் எப்படி பேசுவது என்று தயங்கிய
வள்ளியம்மாள் தாங்களும் ஜானகியும் பழகிவருவது நாலுபேருக்குத் தெரிந்து அசிங்கப்
படுவதற்கு முன்பாக தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் படியாகவும் திருமணத்தின்
பின்பு தாங்களும் தங்களுடன் தங்கிவிட வேண்டும் என்பதாகவும் கூறினாள். அதற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கின்ற விதமாக சுந்தரம் திருமணத்திற்குப் பிறகு உங்களை விட்டு ஜானகி
தனித்து இருப்பதுதான் நல்லது. மேலும் 30 வயது ஆகியும்
நீங்கள் அவளை குழந்தையாகவே வளர்த்து விட்டிருக்கிறீர்கள் என்று கூற
முத்துமாணிக்கம் அதனை ஏற்று சுந்தரத்தைப் பாராட்ட கோபமடைந்த வள்ளியம்மாள். முத்து
மாணிக்கத்திடமும் சுந்தரத்திடமும் கடிந்து கொண்டாள். சுந்தரம் இதற்குமேல்
இருக்கலாகாது என வெளியேறிவிட்டார். முத்து மாணிக்கத்தை நீ ஒரு பைத்தியம். அது
உனக்குத் தெளியவில்லை எனவும் என் பிள்ளைகள் என்னுடையே இருக்கட்டும் வெளியே சென்று
கஷ்டப்பட வேண்டாம் எனவும் தன்னுடனே அனைத்துக் கொண்டாள்.