ஞாயிறு, மே 10, 2020

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்

     சினிமாவுக்குப் போன சித்தாளு கண்ணதாசன், 1972
செல்லமுத்து மெட்ராசிற்கு வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு சிங்காரம் வந்தாலும் இன்று ஒரு ரிக்ஷாவுக்குச் சொந்தக்காரன். ஆனால் செல்லமுத்து சிங்காரத்திடம் வாடகைக்கு இரவு மட்டும் ஓட்டுகிறான். செல்ல முத்துவின் மனைவி கம்சலையை நத்தப்பட்டுக் கிராமத்திலிருந்து திருமணம் செய்து வந்துள்ளான். சினிமா பற்றி ஒன்றுமரியாத கம்ஸலைக்கு வாத்தியார் படங்களைக் காண்பித்தது செல்லமுத்துதான். ஒரு நாள் செல்லமுத்து அணிந்திருந்த பனியனில் வாத்தியார் (எம்.ஜி.ஆர்) படம் இருந்ததைப் பார்த்து கம்ஸளை முத்தமிட்டாள். தன்னைத்தான் முத்தமிட்டதாக எண்ணி அவளை இழுத்தான். செல்லமுத்து என்று உணர்ந்ததும் அவனை உதறித் தள்ளிவிட்டு கம்ஸலை சித்தாளு வேலைக்குச் சென்று விட்டாள். அவள் ஆசைப்பட்டது வாத்தியார் மீதுதான் என் மீது அல்ல என அறிந்ததும் கோபம் கொண்டு வீட்டிலிருந்த வாத்தியார் படங்களையும் பனியனையும் கிழித்து எறிந்தான். இரவு வந்த கம்சலை அதைப்பற்றிக் கேட்டதும் அவளிடம் சண்டையிடு இனி வேலைக்குச் செல்லக்கூடாது. வாத்தியார் படம் பார்க்கக் கூடாது என கூறிவிட்டான். ஒரு மாதத்திற்கு அவளும் கட்டுப்பட்டு இருந்தாள். ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிவந்த கோடியில் ஒருவன்படத்தைப் பார்க்க அவள் விரும்புவதை அவன் மறுத்துவிட்டான். அவளின் ஆர்வத்தை கண்ட சிங்காரம் கம்சலையை படத்திற்கு அழைத்துச் சென்று திரும்பிம் வழியில் உடலுறவிற்கு கட்டாயப் படுத்தினான். அங்கிருந்த சேரியில் மனோமணி அக்கா வீட்டிலிருந்த வாத்தியார் போட்டோவைப் பார்த்ததும் கம்சலைக்கு மகிழ்ச்சி பொங்கியது. அன்று இரவு கழிந்த பிறகு செல்லமுத்து தேடுவான் என்ற அச்ச உணர்வும் தவறிழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வும் மேலிட கம்சலை அங்கேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்துவிட்டாள். இரண்டு நாட்களாக கம்சலையைத் தேடிய செல்லமுத்து அவள் நத்தம் பட்டிற்கு சென்றிருப்பாள் என யூகித்து இரயில் பயணத்திற்கு பணம் கடன் வாங்க சிங்காரத்திடம் சென்று தன் நிலமையைக் கூறுகிறான். சிங்காரம் ஒன்றும் அறியாதவன் போல் மனோமணி அக்கா வீட்டில் சிலர் பார்த்ததாகக் கூறினர் என்றான். அந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்த செல்லமுத்து அங்கு சென்று கம்சலையை வீட்டிற்கு அழைத்தான். அவள் குற்ற உணர்வு மிகுதியால் வரமறுத்து விட்டாள். அவன் என்ன செய்வதன்றி திரும்பிவிட்டான். மனோமணி அக்காவும் கம்சலையும் வாத்தியாரு சூட்டிங் பார்க்கச் சென்றனர். அங்கு வில்லனுக்கும் வாத்தியாருக்குமிடையே ஏற்பட்ட உண்மையான வாக்குவாதத்தில் வில்லன் வாத்தியாரை கத்தியால் குத்திவிட்டான். அப்பொழுது அதிர்ச்சியில் மயங்கிய கம்சலை கண் விழித்த போது வாத்தியார் இறந்துவிட்டதாகக் கூறிய செய்தி அவளைப் பித்துப் பிடிக்கச் செய்து விட்டது. சென்னைக் கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்திற்குள் சென்று செல்லமுத்து பார்த்த போது கம்சலை ஆடையின்றி வாத்தியாரு சுவரொட்டிகளைச் சுற்றிக் கொண்டு ஆடியதைக் கண்டு, அவளைப் பிடித்து வீட்டிற்கு அழைத்தான். அவள் திமிறிக் கொண்டு ஓடினாள். மீண்டும் ஓரிடத்தில் அவளை அழைத்த பொழுது வாத்தியார் இறந்துவிட்டதாகக் கூறி அழுதாள். வாத்தியார் உயிரோடுதான் இருக்கிறார். அவருடைய புதிய படம் வெளியாயிருக்கிறது என்று கூறியதும் அவனுடன் வர சம்மதித்தாள். அங்கிருந்த கண்ணகி சிலையக் கண்டறிந்து அது என்னுடையது தானே என்றாள். அவனும் ஆம் என்றான். வாத்தியாரின் பாடலைப் பாடிக்கொண்டே ரிக்ஷாவில் சென்றாள்.