பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – மேகலா, 1979
குப்பம் என்ற சிற்றூரில் சர்க்கரை ஆலை இருந்தது. அவ்வூரில் பாசனக் கடை
(சிற்றுண்டிச் சாலை) வைத்திருந்தாள் பாப்பாத்தியம்மாள். அவள் சுப்பு சாஸ்திரிக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்த சில ஆண்டுகளிலேயே ஒரு
குழந்தை பிறந்தவுடன் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டிருந்த சுப்பு சாஸ்திரி
பட்டாமணியத்திடம் இவர்களை ஒப்படைத்துவிட்டு திறந்துவிட்டார். பட்டாமணியம் நல்லவனல்ல. அவனிடமிருந்து தப்பி கிணற்றில்
குதித்ததில் குழந்தை இறந்தது. அவள் பிழைத்தாள். சிறையிலடைக்கப்பட்டாள். அங்கு வேத
வள்ளிபாட்டியை சந்தித்தாள். வேதவல்லிப் பாட்டியின் மகள் மீனாட்சி, கணவனின் கொடுமை தாங்காது அவன் தலையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றிக் கொன்றுவிட்டு சிறை வந்தாள். மீனாட்சி இறந்த பிறகு அவளது மகன் பரந்தாமன் பாப்பாத்தியின் மகனானான். வேத வள்ளிப் பாட்டியால்
வளர்க்கப்பட்ட அவன் அவள் இறக்கும் வரை பிராமணனாகவே வாழ்ந்தான். புத்திசாலித்தனமும் அறிவுத் திறனும் மிகுந்திருந்த அவனுக்கு
கடவுள் நம்பிக்கை இல்லை. பல இடங்களில் வேலை தேடி இறுதியாக வேணுபிள்ளையிடம் கணக்குப் பிள்ளையாக சேர்ந்தான். வேணுப்பிள்ளை
பொய்க்கணக்கு எழுதக் கூறுவதை வெறுத்து வேலையை விட்டுவிட்டான். அப்பொழுது தோழர்
துரைசிங்கத்தின் நட்பு கிடைத்து கம்யூனிசம் சார்ந்த கருத்துக்கள் கொண்ட நூற்களைக் கற்றான். இருவரும் ஆலைக்கு அருகில் பகத்சிங் நூலகம் ஒன்றை
நிறுவினார். ஆலை நிர்வாகத்தை எதிர்த்து தொழிற்சங்கம் ஒன்றைத் துவங்க ஆர்வலர்கள் பலருடன் இணைந்து
துரைசிங்கம், ராமா, ஆஷா, பரந்தாமன், இராமன் நாயர் செயல்பட்டனர். தொழிற்சங்கத்தில் சேர்வதற்கு வேணுபிள்ளை மிகுந்த ஆர்வம் காட்டினான். தொழிற்சங்கத்திற்கு
ஆதரவாக தொழிலாளர்களைத் திரட்டினான். அவனையும் தொழிற்சங்க உறுப்பினனாகச் சேர்த்துக் கொண்டனர். அவன் நிர்வாகத்தின் ஆள் எனப்
பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதுபோலவே சங்கத் தேர்தலில் இராமன் நாயரை எதிர்த்து
நின்று தேர்தலில் வேணுபிள்ளை பணத்தின் ஆதரவில்
வெற்றியடைந்தான். இதனிடையே பிரச்சாரத்தில் துரைசிங்கத்தின் நூலகம் அடித்து நொறுக்கப்பட்டது. வேணுப்பிள்ளையை
எதிர்த்துக் கருத்துக்கள் தெரிவிக்க தோழர்களால் தொடங்கப்பட்ட பத்திரிக்கையின்
பெயர் தாக்குதல் ஆகும். இதில் வேணுபிள்ளையின் குற்றங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. இதனிடையே அவனுக்கு எதிராகக்
குரல் கொடுப்பவர்களை அழித்துவிட நினைத்தான். இதற்கிடையில் வேனுபிள்ளையின்
பகைவர்கள் ஒரு சிலர் அவனைக் கொன்று பலியை தோழர்கள் மீது சுமத்திவிட்டனர்.
இவ்விசாரணையில் போலீசாரால் தோழர் கூட்டத்தினர் தேடப்பட்டு வந்தனர். தேடலில்
பரந்தாமன் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் அதிகாரி பாப்பாத்தியம்மாளை அழைத்து
பிணத்தைக் காட்டிய போது அவன் என் மகன் அல்ல
என்று கூறி விட்டாள். ஆனால் அவள் மனதிற்குள் அவன் நான் பெற்ற மகன் அல்ல என்பதையே
நினைவூட்டியது. மற்ற தோழர்கள் பரந்தாமன் இறந்துவிட்டதற்கு வருத்தம் தெரிவித்து
கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்திற்கு சென்ற பாப்பாத்தி,
தான் மகன் கொடுத்திருந்த ‘அன்னை’ என்ற ருஷ்ய நாவலைச் சுட்டிக்காட்டி இறந்தது என் மகன் அல்ல,
இந்நாவலில் வரும் ‘நீலாவ்னா’ என்ற தாயின் மகன் ‘பாவேல்’ என்றாள். என் பெயர் பாப்பாத்தி என்றாள். அவள் முரண்பாடாகக்
கூறினாலும் அவளின் புலம்பல் மகன் இறந்துவிட்டதை உணர்த்துகிறது என நீதிபதி
பரந்தாமனின் இறப்பை உறுதி செய்தார். வாழ்க்கையை தனிமையாகிவிட்ட பாப்பாத்தியம்மாள்
பட்சணக் கடையோடு அவளும் தனிமையாகிவிட்டாள். வழக்கம்போல் அவளின் தனிமை வாழ்க்கைத்
தொடர்ந்தது.