ஊருக்கு நூறு பேர் – மேகலா, 1979
ஆனந்தன் ‘போராட்டம்’ இதழின் ஆசிரியர், 40 வயதாகியும் திருமணமாகவில்லை. இவருக்கு தூக்கு மேடைக்கு
செல்லவிருக்கும் மலையாண்டியிடமிருந்து கடிதம்
வந்தது. அதில் தங்களைச் சந்திக்க ஒருவன் வருவான் அவனுடன் செல்லவும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்
கோவிந்தசாமி, 60 வயதிற்கு மேலாகிறது. அவரது மகள் ருக்குமணி 30 வயது
ஆகிறது திருமணமாகவில்லை. தந்தையின் வறுமையுணர்ந்து அவளும் அதற்காக கவலை
கொள்ளவில்லை. பக்கத்து வீட்டுக் கிழவி அவ்வப்போது ருக்குமணியின் திருமணம் குறித்து
கோவிந்தசாமியிடம் புலம்புவாள். ஆனந்தனை திருமணம் முடிக்குமாறு கூறுவாள். ஆனந்தன்
ஊருக்கு நூறு பேர் தூக்கு தண்டனைக்கு எதிராக கையெழுத்திடுவது தொடர்பாக மலையாண்டி
குடும்பத்தினரிடமும் கொலை செய்யப்பட அர்ச்சகரின் குடும்பத்தினரிடமும் கையெழுத்து
பெற்று மேலும் நிறைய கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதற்கான
கருணை மனு வருவதற்குள், மலையாண்டி தூக்கிலடப்பட்டான். ருக்குமணி வீட்டிற்கு ஆனந்தன்
சென்ற போது கிழவி அங்குள்ள குழந்தைகளிடம் தன் கணவன் எழுமலையின்
கதையக் கூறினாள். அவர் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் கூலிவேலை செய்ததாகவும்,
மேஸ்த்திரி டோக்கன்களை கூலிகளை அவமானப் படுத்தும் விதமாக தூக்கி எரிந்ததாகவும் அதை எதிர்த்து
ஏழுமலை போராடி வெற்றி பெற்றதையும் கூறினாள். ஆனந்தனுக்கு ருக்குமணியின் மீதும்
அவளுக்கு ஆனந்தன் மீதும் விருப்பமிருந்தது. இருப்பினும் கொள்கைப்படி திருமணம்
என்பது தன்னைப் போராட விடாது என்பதனால் ஆனந்தன் போராட்டத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து வந்தார். இது ருக்குமணிக்கும் ஒரு மாநாடாக புரியவே செய்தது. மலையாண்டி
குறிப்பிடாது போலவே ஒரு நாள் போராட்ட இயக்கத்திலிருந்து தூதுவன் வந்தான்.
இதற்கிடையில் மலையாண்டி தூக்கிலிடப்பட்ட செய்தியறிந்து ஆனந்தன் கோபமுற்றிருந்தார்.
கருணை மனு வருவதற்கு முன்பாக இவர்கள் தூக்கிலிட்டதற்கு எதிராக கட்டுரை வெளியிட
ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். தூதுவனின் அழைப்பின் பேரில் போராட்ட இயக்கத்தில்
கலந்து கொள்ள ஆனந்தன் சென்று விட்டார். அங்கு சென்ற போதுதான் ஆனந்தனுக்குத்
தெரியவந்தது. மலையாண்டி இந்த இயக்கதைச் சார்ந்தவன் என்றும் இந்த இயக்கத்தை
வலுப்படுத்த வேண்டி பெருமாள் கோயிலில் உள்ள தங்கக் கிரீடத்தை கொள்ளையடிக்கச்
சென்றவிடத்தில் அவனை மறித்த அர்ச்சகரை தப்பித்துக் கொள்ள வேண்டி கொலை செய்து மாட்டிக்
கொண்டான் என்று, அவ்வியக்கத்தில் போராளிகள் அனைவரும் மதம்,
மொழி, மாநிலம் கடந்து ஒரு கொள்கைக்குக் கீழ் இயங்கி வருகின்றனர்
என்பதை தளபதியைக் கண்டதும் ஆனந்தன் தெரிந்து கொண்டார். இப்போராட்டம் குழுவில்
ஆனந்தனுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னரும் தனது
எழுத்துத் தொழிலை விட வேண்டாம் என்றும் இயக்கக்திற்கு ஆதரவாக நிறைய எழுதவே அவர்
அழைக்கப் பட்டுள்ளார் எனவும் ஆனந்தனிடம் தளபதி அறிவித்தார். இதையடுத்து ஆனந்தன்
எழுதிய கடிதம் ஒன்று தூதுவன் வாயிலாக, பிரசுரிப்பதற்காக ருக்குமணிக்குக் கிடைத்தது. இப்பொழுது
பத்திரிக்கை அலுவலகத்தின் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ருக்குமணி கடிதத்தைப்
படிக்கலானாள். அதில் மலையாண்டி எழுதிய கவிதையுடன் கட்டுரை தொடங்கியது.