ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் – நவரத்தினம், 1979
சபாபதி, கன்னியப்பன் அவர்களுடன் மேலும் ஒருவன்,
மூவரும் பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை 5000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கடத்தி வருவது கண்டு,
காவலர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு, வருகின்றனர். காவலாளி கார் டயரில் சுட்டதில் கார் தடுமாறி
நின்றது. மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர். சபாபதியைக் காவலாளி தொடையில் சுட்டுப்
பிடித்துவிட்டான். மருத்துவமனையில் அவனைச் சேர்த்த பிறகு அவனது மனைவி உண்ணாமலை
சபாபதியைப் பார்க்க வந்தாள். கண் விழித்த சபாபதி லீலா என்று கூறிவிட்டதான் பேரில்
அவனிடம் சண்டையிடு வீடு திரும்பினாள். சபாபதிக்கு இடப்பட்டிருந்த காவலாளி தனக்கு
இரண்டு மனைவி இருப்பது போல உனக்குமா என இருவரும் பேசிக் கொண்டனர். லீலாவிடமிருந்து
கன்னியப்பன் கொண்டு வந்த கடிதம் அவனுக்கு மகிழ்வைத் தந்தது. சபாபதியின் அம்மா
பச்சையம்மா நான்கு எருமை மாடுகள் வைத்து ஊருக்கு பால் ஊற்றுகிறாள்.
சிறுவயதில் சபாபதிதான் வீடு வீடாக ஊற்றி வருவான். அப்போதுதான் முதல் தடவையாக
முதலியார் வீட்டில் லீலாவைப் பார்த்தான். அதிலிருந்து தான் தவராமல் பால் ஊற்றி
வந்தான். சபாபதியை வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் உண்ணாமலையை திருமணம் செய்து
வந்தான். மாமனார் வாடகைக்கு ஓட்டுவதற்காக வாங்கிக் கொடுத்த வண்டி தற்போது கடத்தல்
காராக மாறியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு லீலாவை சரக்கு இருக்குவதற்காகச்
சென்ற ஒரு லாட்ஜில் பார்க்க நேர்ந்தது. அங்கு அவள் ஒருவனுடன் உல்லாசமாக இருப்பது
கண்டு சினந்தான். அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திய பிறகு அவள் தெரிந்தவள் போல்
காட்டிக் கொண்டாள். அதன் பிறகு தன் தந்தை இறந்து விட்டதாகவும்,
வீட்டை விற்றுவிட்டதாகவும் தற்பொழுது மாமாவின் உதவியில்
வாடகையில் இருந்து வருவதாகவும் கூறினாள். மாமாவின் பணக்கார நண்பர்களோடு தங்கி
பிராஷ்டிடியூட் தொழில் செய்வதாகவும் அவள் சொன்னது கண்டு கண் கலங்கினான். இனிமேல்
இதுமாதிரி நடந்துகொள்ளக்கூடாது என்றும் பணம் தேவைப்படும் சூழலில் நான் தருகிறேன்
என்றும் சபாபதி கூறியதும் ஆதரவற்ற தனக்கு ஆதரவு கிடைத்துவிட்ட நிலையில் மிகவும்
மகிழ்ந்தாள் லீலா. அதனையடுத்து அவர்கள் அடிக்கடி சந்திப்பது தெரிந்து உண்ணாமலை
சண்டையிடாத நாட்களே இல்லை. சபாபதி ஜாமீனில் வெளிவந்தாலும் கால் முன்போல செயல்பட
வில்லை. தாங்கித் தாங்கியே நடந்தான். இந்நிலையில் மீண்டும் கன்னியப்பனுடன்
சேர்ந்து தொழில் தொடங்க முனைந்த பொது உண்ணாமலை தடுத்து நிறுத்தினாள். ஒரு நாள்
லாட்ஜில் லீலாவை சந்தித்து விட்டு வீடு திரும்பிய சபாபதியை மறித்து ஞாயம் கேட்க
தகராறில் உண்ணாமலையை வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டான் சபாபதி. மீண்டும்
தன் தவறை உணர்ந்து உண்ணாமலையை அழைக்கச் சென்ற போது உண்ணாமலை வர மறுத்துவிட்டாள்.
மாமனார் ராமக்கோனார் காலப்போக்கில் இது சரியாய்ப் போய்விடும் என்று கூறி சபாபதியை
வழியனுப்பி வைத்தான். இப்பொழுது லீலா சபாபதி வீட்டிலேயே குடித்தனம் வந்து
விட்டால். சபாபதி அவ்வப்போது லீலாவின் அறிவுரையின் பேரில் மாமனார் வீடு சென்று
உண்ணாமலயை சந்தித்து வருகிறான். சபாபதியின் மூத்த மகன் லீலாவுடனும் சபாபதியுடனும்
தங்கிப் படிக்கின்றான். லீலா பால் கறந்து கொடுக்க சபாபதி வீடு வீடாக ஊற்றி
இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.