ஞாயிறு, மே 10, 2020

கோகிலா என்ன செய்து விட்டாள்? - ஜெயகாந்தன்

      கோகிலா என்ன செய்து விட்டாள்?   ஆனந்த விகடன், 1967.
அனந்தராமன் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் துணை ஆசிரியன். வாரந்தோறும் பத்திரிக்கையில் சனிக்கிழமை உலகத்தின் மேல் ஒரு கண்என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்தான். அந்தவாரம் ஒரு மனிதன் ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு மனிதனாய் சிதறுண்டு போவதைப் பற்றியதாக எழுதியிருந்தான். அது அவனுக்கும் மனைவி கோகிலாவிற்குமான 10 வருஷ தாம்பத்திய வாழ்க்கையில் அவன் பல்வேறு மனிதனாக சிதறுண்டு போனதின் வெளிப்பாடாய் இருந்தது. அனந்தராமன் அலுவலகத்தில் வேலை செய்த கோகிலா பெற்றோரை எதிர்த்து இருவரும் காதல் திருமணம் செய்திருப்பினும் காலப் போக்கில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளலாமல் வெறுப்புடன் வாழ்ந்து வந்தனர். கோகிலாவின் பாலிய சினேகிதன் வருவது, அனந்தனுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அனந்தனின் கசப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள அந்த சினேகிதன் ஆறுதலாய் இருந்தான். அனந்தன் ஒருமுறை ஆப்பீசிலிருந்து வந்தபொழுது கோகிலா உங்களிடம் சாவியைக் கொடுக்கச் சொன்னாள் என்று அந்த வீட்டுக்கார அம்மாளின் மகள் கொண்டு வந்து கொடுத்தும் கோகிலா தன்னைப் பிரிந்து சென்று விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டான். அவள் எழுதிய கடிதத்தையும் படிக்கவில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் கோகிலா பெற்றோரைப் பார்க்க சென்றுவிட்டதாக சமாளித்து விட்டான். டெல்லிக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கோகிலாவிடம் தெரிவிக்க வந்த அவனுக்கு ஏமாற்றமே அளித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு வழியில் கோகிலாவை சந்தித்து முறைப்படி பிரிந்து செல்லலாம் என்று கூறியதன் விளைவாக கோகிலாவும் வீடு திரும்பினாள். அந்த நாள்கள் இருவரும் பெரிதாய் பேசிக்கொள்ள வில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் நிரந்தரமாக பிரிந்து விடுவோம் என்கிற மன உறுத்தலோடு தனக்குள்ளாகவே இருவரும் புலம்பிக் கொண்டிருந்தனர். ஸ்டேஷனிலும் ஒருவருக்கொருவர் மௌனப் போராட்டமாகவே இருந்தனர் இரயில் கிளம்பப் போவதை அறிந்த அனந்தராமன் சென்றதைத் தொடர்ந்து கோகிலாவும் சென்றாள். அவள் அந்தக் கடிதத்தை அவனிடம் கேட்க அதற்கு அவன் மறுப்புத் தெரிவித்து விட்டான். இரயில் சற்று நகர ஆரம்பிக்க இதுவே கடைசி பார்வை என இருவரும் பார்த்துக் கொண்டனர். அந்தக் கடிதத்தைப் பெற்றுவிட வேண்டி இரயிலைத் தொடர்ந்து வருகிறாள் என அவன் நினைக்க, ஏதோ நினைத்தவளாய் இரயிலில் ஏற முயற்சிக்கிறாள். தன் கரங்களை நீட்டி கோகிலாவை இரயிலில் ஏற்றிக் கொண்டான் அனந்தராமன். படிக்க வேண்டிய கடிதம் அவசியமின்றி சுக்கு நூறாக கிழித்து எறியப்பட்டிருந்தது.