ஞாயிறு, மே 10, 2020

இலக்கணம் மீறிய கவிதை - ஜெயகாந்தன்

      இலக்கணம் மீறிய கவிதைதாமரை, 1963.
இராமநாதன் 35 வயது ஆகிறது, திருமணமாகவில்லை. பெற்றோர்கள் வற்புறுத்தியும் கேட்கவில்லை. கவிதைகள் எழுதி பத்திரிக்கையில் வெளியிடுவான். வாங்குகிற மாதம் 150 ரூபாயில் தனியாக வாழ்ந்து வந்தான். ஒரு முறை 50 ரூபாய்க்கு வடநாட்டுக் காரி என்று ஒரு வேசியை அழைத்து வந்தது கண்டு கிருஷ்ணய்யர் என்பவர் நீங்களெல்லாம் ஒழுக்கமில்லாத மனிதர்கள் என்று திட்டினார். அதற்கு இராமநாதன் 150 ரூபாயில குடும்பம் குட்டினு கஷ்டப்படுறதை விட தனியா இருப்பதே மேல் என்றான். ஒரு நாள் கடைத் தெருவில் ஒரு வேசிப் பெண்ணின் (சரளா) குறிப்பு அறிந்து அவளைத் தொடர்ந்து அவளது வீட்டிற்குச் சென்ற பிறகு தன்னிடம் பணம் இல்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டான். அதை சரளாவிற்கும் கூறினான். முதலில் திட்டிய சரளா உடனே வெளியே போனால் அனைவரும் ஏளனமாகப் பார்ப்பார்கள், சிறிது நேரம் கழித்துப் போங்கள் என்றாள். பிறகு இன்று என்னுடைய வீட்டில்தான் விருந்து என்று கூறி விருந்தளித்தாள். இடையிடையே உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதையும் கூறினாள். காலையில் சரளாவைப் பிரிந்து சென்ற இராமநாதன் அவளைப் பிரிய மனமின்றி பிரிந்து சென்றான். 10 நாட்களுக்குப் பிறகு சம்பளம் பெற்றவுடன் 60 ரூபாய்க்கு புடவை வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்க வந்தான். அவளை போலீஸ் பிடித்துச் சென்றது தெரிய வந்தது. வாங்கிய புடவையை பக்கத்து வீட்டுக் காரியிடம் கொடுக்கும் பொதுஎனக்காக வரவேண்டாம். நான் இல்லாவிட்டால் என்னைப் பக்கத்து வீட்டுக் காரியிடம் செல்லுங்கள் என்று கூறியது ஞாபகம் வந்தது. அவளிடம் செல்லாமல் சரளாவைப் பற்றி கிருஷ்ணய்யரிடம் கூறினான். கிருஷ்ணய்யர் அவளது நடத்தை கண்டு ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டார். அவள் தனக்கென வாழ்க்கைத் துணை வேண்டும் எனப் போராடுகிறாள் என நினைத்தார்