பிரளயம் – ஆனந்த விகடன், 1964.
தீனனுக்கும் பாப்பாத்திக்கும் நாளை திருமணம். பாப்பாத்தி அம்மாசிக் கிழவனின் வளர்ப்பு மகள். அழகப்பர் வீட்டில் வேலை செய்கிறாள். அழகப்பரின் மகன் செல்வனுக்கும் பாப்பாத்திக்கும் கள்ளத் தொடர்பு. இது நீண்ட காலம் தொடர வேண்டும் என பாப்பாத்தியை செல்வன் வீட்டிற்கு என ரிக்ஷா ஓட்டும் தீனனுக்குத் திருமணம் முடிக்கிறான். திருமணத்தன்று இரவு அம்மாசிக் கிழவன் வாழுகின்ற சேரியில் வெள்ளம் புகுந்துவிட மக்கள் அனைவரும் பள்ளிக் கூடத்தில் தஞ்சம் புகுந்தனர். பாப்பாத்தி முதலாளி வீட்டில் தஞ்சம் புக, அவளை பாலியல் உறவிற்கு அழைக்கிறான் செல்வன். தான் கணவனுக்குத் துரோகம் செய்தல் கூடாது என செல்வத்திடமிருந்து விளக்குகிறாள். மாணிக்கத்தின் மனைவி கோகிலா (பார்வையற்றவள்) பிச்சையெடுத்து வரும்படி கணவனால் அனுப்பப்படுகிறாள். சிறைக்குச் சென்றுவிட்ட பக்கிரியின் மனைவிக்கும் பச்சையம்மாளுக்கும் மாணிக்கத்திற்கும் கள்ளத் தொடர்பு. மழையில் ஒதுங்கிய மக்களுக்கு அரசியல் ஆதாயத்திற்காக உணவுப் பொட்டலம் வழங்கப்படுகிறது. அம்மாசிக் கிழவன் வாங்கவில்லை. அம்மாசிக் கிழவன் குழந்தைகளுக்கு கதை சொல்வது வழக்கம். சிறு பொம்மைகள் செய்து விற்பவர். பக்கிரி சிறையிலிருந்து திரும்பி வந்ததும் கோகிலாவிடம் ஒரு ரூபாய் கொடுத்து பாலியல் உறவு கொள்கிறான். தன் மனைவி பச்சையம்மாளை தேடிச் செல்கையில் அங்கு வந்த மாணிக்கத்தை அடித்து விடுகிறான். காலத்திற்கும் தன் மனைவியை அடித்ததால்தான் தற்பொழுது பக்கிரியிடம் அடிவாங்கி விட்டேன் என திருந்திய மாணிக்கம் கோகிலாவை அழைத்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என செல்லுகையில் பாதாளக் குழியில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். நீர் வற்றியதும் சேரி மக்கள் தங்களின் இருப்பிடங்களுக்குச் செல்கின்றனர். இழப்பீடுகளும் வழங்கப்படுகின்றன. குடிசைகள் கட்டியாச்சு சாப்பிட வழியில்லை. வீடு கிடைத்தால் சோறு கிடைக்காது, சோறு கிடைத்தாள் வீடு கிடைக்காது. இதுதான் சேரி மக்களின் பிழைப்பு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கதை முடிவுறுகிறது.