கரு – நயனதாரா, 1981
கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என யோசித்த கந்தசாமியின்
யோசனைக்கு உடன்பட்ட அவனுடன் தங்கியிருக்கிற மணி, (45 வயது) தான் வேலை பார்க்கும் பிரஸ்ஸின் முதலாளிப் பொண்ணு
சாமியின் மகள் சரசாவின் சம்மதத்தைக் கேட்டார். கந்தசாமியை பல விளம்பரங்களில்
படித்த சரசா, அவனை நேரில் சந்தித்ததும் அவனது குணங்களும் பிடித்துவிட்டன.
திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டாள். பிறந்தவுடனேயே பெற்றோர் காலை இழந்துவிட்ட கந்தசாமி ஊரைவிட்டு பட்டணத்திற்கு வந்து
மூட்டை தூக்கிப் பிழைத்து வந்தவனின் உடல் கட்டுமானத்தைப் பார்த்த வடிவேலு நாயகர்
பாக்ஸராக மாற்றினார். அவரது வழிகாட்டுதலில் கந்தசாமியும் வெற்றிகள் பலவற்றைக்
குவித்தான். முக்கியமாக இடியாப்ப நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த எல்லப்பனின் சீடனான
நாக் அவுட் நீலகண்டனை பலமுறை வெற்றி கண்டதே சிறப்பு. சரசா மற்றும் அவளது குடும்பத்தினர் அனைவரும் பெரியாரின் பகுத்தறிவுக்
கருத்தியல் வாதிகள். சரசாவிற்கும் பெரியார் கூறிய சுயமரியாதைத் திருமண முறை நடைபெற்றது. என்றாலும் தாலி கட்டும் முறையை
ஏற்று தாலி கட்டினர். திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள்
பெற்றுக் கொள்ளலாம் என்ற சரசாவின் விருப்பத்தினை ஏற்று மீண்டும் குத்துச்
சண்டைக்குத் தயாரானான் கந்தசாமி. திருமணமாகிவிட்டால் யாரும் குத்துச் சண்டை
செய்வதில்லை என்று நினைத்திருந்த வடிவேலு நாயக்கரின் எண்ணம் கந்தசாமியின் செயலில்
மாறிவிட்டது. கந்தசாமி மீண்டும் நாக் அவுட் நீலகண்டனிடம் மோதுவதாக சவால் விட்டான்.
உடலுறவில் கரு உண்டாகமலிருக்க சரசாவின் தமக்கையர் கருத்தடை மாத்திரைகள்
கொடுத்திருந்தனர். இவர்களின் கட்டுப்பாட்டில் மாத்திரைகள் அவசியமில்லை என்பதை சரசா
உணர்ந்திருந்தாள். இதனிடையே கந்தசாமியின் உடன் பிறப்புக்களைச் சந்தித்து விட்டு
இருவரும் வந்திருந்தனர். தான் குத்துச் சண்டை தொடரவிருப்பதினை கந்தசாமி சரசாவிடம்
தெரிவித்ததும் அவள் அதற்குச் சம்மதம் தெரிவித்ததோடு தானும் வருவேன் என்று
கூறியிருந்தார். கந்தசாமி பலமுறை ஆணுறையின் பயன்பாடு குறித்து மறைமுகமாக சரசாவிடம்
பேசியதை சரசா தெரிந்து கொண்டு, கணவனின் விருப்பம் எதுவோ அதுவே தன் விருப்பம் என்பதையும்
அவனிடம் கூறியிருந்தாள். ஞாயிற்றுக் கிழமையன்று பாக்ஸிங் செல்ல கந்தசாமி கிளம்பிய போது தனக்கு தலைவலிக்கிறது எனக் கூறி சரசா வர மறுத்துவிட்டாள். கந்தசாமி களத்தில் இறங்கி நாக்அவுட் நீலகண்டனிடம் சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறான். ஆறாவது சுற்றுக்குத் தயாராகிறார்கள். வீட்டில் சரசா வாந்தி
எடுக்கிறாள். சுற்றத்தினர் ஓடி வந்து அவளின் கையைப் பிடித்துப் பார்க்கின்ற பொழுது
அவள் கற்பமாயிருப்பது கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். தானும் தான்
தமக்கைகளைப் போல இயந்திரம் ஆகிவிட்டோமோ என்று மனதில் நினைத்துக் கொள்கிறாள் சரசா,
குத்துச் சண்டை தொடர்கிறது.