ஞாயிறு, மே 10, 2020

கரிக்கோடுகள் - ஜெயகாந்தன்

கரிக்கோடுகள் மணியன், 1981
மாதவராவ் ரிடையார் ஆகிவிட்டதாக கங்குபாயின் கணவருக்குக் கடிதம் வந்துள்ளது. மேலும் அவர் தன்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தும் எழுதியிருக்கிறார். தன் மனைவி கடிதம் எழுதிவிட்டு கோபித்துக் கொண்டு அவளின் உறவினர் வீட்டிக்குச் சென்றுவிட்டடாள் என்றாலும் மாதவராவ் வருவது இவருக்கு ஆறுதலாயிருந்தது.  அவரைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தன் மனைவியின் பிரசவத்திற்குப் பணம் வாங்கிச் சென்றவர் மனைவி இறந்துவிட்டதைக் கூறியதும் இவருக்கு வருத்தம் மிகுந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கிறார். மாதவராவ் மலைவாசிக் கிராமத்தில் பள்ளியாசிரியராகப் பணியாற்றினாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட சிறந்த கன்னடா எழுத்தாளர் ஆவார். மாதவராவ் கூறியதன்படி கங்குவின் கணவர் கங்குபாயை பத்திரிக்கையில் எழுதுவதை நிறுத்தும்படி கூறியதற்காக பெண்களின் சுதந்திரத்தில் ஆண்களின் தலையீடு என எழுதிவிட்டு சென்றுவிட்டாள் என நினைக்கும்போது அவருக்கு வருத்தமாயிருந்தது. கங்குவின் கணவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். மண்ணடிஎனும் ஊரில் போட்டோ கிராப் தொழில் செய்து வந்தவர். அவர் வீட்டில் வாடகையில் குடித்தனம் ஏரிய கங்குபாய் வீட்டார். இவ்விருவருக்கும் ஏற்பட்ட காதல் உணர்வை உணர்ந்து திருமணம் முடித்து வைத்தனர். அவர்களுக்கு ஒரு மகனும் (கிரீதாரி), ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றாகிவிட்டது. வீட்டில் வேலை செய்யும் ராமன் கன்னடக்காரன். ஆனால் அஞ்சலை தமிழச்சிதான் தமிழைத் திட்ட வேண்டுமென்றால் அஞ்சலையைத் திட்டுவது கங்குபாயின் வழக்கம் கூறியது போல மாதவராகவும் வந்துவிட்டார். ராமனாவை உறவினர் வீடுகளுக்குச் சென்று வரும்படி அனுப்பிவிட்டார் கங்குவின் கணவர் வெளியூருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தும் இருவருக்குள்ளாக பேச வேண்டியவையே நிறைய இருப்பதனால் இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்துவிட்டனர். கங்குபாய் வீட்டை விட்டு சென்றுவிட்ட இரு வாரங்களுக்குள்ளாக கடிதங்களும் பத்திரிக்கைகளும் குவிந்துவிட்டிருந்தன. மாதவராவ் வந்த மூன்றாவது நாளில் கங்குபாய் வீடு திரும்பினாள். வீட்டில் உள்ள பத்திரிக்கைகள் கடிதங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய மாதவராவையும் கங்குபாயின் கணவனையும் கண்டு வியப்படைந்தாள். மாதவராவ் தன் வீட்டிற்கு வந்திருப்பது அவளுக்கு ஆச்சரியமூட்டியது. மேலும் சமையல்காரர்கள் யாருமின்றி மாதவராவ் சமைக்கச் சென்றது மேலும் ஆச்சரியமூட்டியது. தன் கணவரின் அறையில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்த கடிதத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள். அதில் இனிமேல் வரமாட்டேன் என்றும் கடுமையாக எழுதியிருந்த வரிகளையும் பேனாவால் அடித்தாள். அதைக் கண்ட கங்குவின் கணவரிடம் அவன் தான் இவ்வாறு செய்ததற்கு மன்னிப்புக் கேட்டாள். உங்களைப் பிரிந்து இருக்கும் விஷயத்தில், தான் தோற்று விட்டதாகக் கூறினாள். தாம்பத்திய வாழ்வில் யாரும் தோற்பதுமில்லை, வெல்வதுமில்லை என்றார். இவர்கள் இணைந்து விட்டதைக் கண்ட மாதவராவ் இவர்களைப் பற்றிக் கரிக்கோடுகள் எனும் தலைப்பில் கதை எழுதப் போகிறேன் என்றார்.