சனி, மே 22, 2021

இளவரசர்கள் - இராமாயணம் மொழிபெயர்ப்புக் கதை 7

1.       A long time ago, there lived a king of name sudarshana. He was wise ruler and was well respected

2.       He had 3 sons who were all groomed to be princes. Though the king was kind and wise, the princes were arrogant and had no humility

3.       They were rude to the servants of the palace, which did not get unnoticed by the king. He was worried.

4.       What is wrong with these children? How can I teach them to be kind and to be worthy kings?

5.       Minister, find a teacher for my sons. Someone who can teach them to be compassionate, kind and worthy of this kingdom

a.       We shall find such a teacher, maha raja*

b.      Maha - great; raja – King

6.       The ministers finally found a teacher of name vishnusharma

a.       Maha raja ! Sent them to my gurukul. I shall teach them and make them better human beings and thus better kings

7.       Knowing the princes aversion to formal education, vishnusharma chose a unique teaching model. He taught them stories of animals and birds that behaved like humans. Each story had a deep moral associated with it. Vishnu sharma grouped all the stories into 5 major tantras (tactics) that every king must follow.

8.       1 - Mitra Bedha - Art of triggering disputes among friends

These set of stories taught princes how to break strong allies of the enemy states

9.       2 - Mitra Labha - Art of acquiring friends

These set of stories taught princes how to be friendly with neighboring states who can come to aid when the country is in need

10.   3 - vigraham

These set of stories taught princes how to break strong allies of the enemy states

11.   4 - sandhi - Art of Treaties

These set of stories taught princes how to two strong enemies can come together towards peace and benefit from each other

12.   Apareekshita-karakam

These set of stories taught princes how to not act in haste and without pondering over the consequences of their actions

13.   Having learned all the political knowledge, the princes returned home humble and wise. 

1.   முன்பு ஒரு காலத்தில், சுதர்ஷனா எனும் மன்னர் வாழ்ந்தார்.  அவர் புத்திசாலியாகவும் மரியாதைக்குரியவராகவும் ஆட்சி புரிந்தார். 

2.   அவருக்கு 3 மகன்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் இளவரசர்களாக இருந்தனர்.  மன்னர் கருணையும் ஞானமும் கொண்டவர் என்றாலும், இளவரசர்கள் திமிர்பிடித்தவர்கள், மனிதப் பண்பு இல்லாதவர்கள்.

3.   அரண்மனையின் ஊழியர்களிடம் அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர், இது மன்னரின் கவனத்திற்கு வரவில்லை.  அவர் மிகவும் கவலையுற்றார். 

4.   இந்த குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று?  அன்புள்ளம் கொண்ட தகுதியுள்ள மன்னர்களாக இருக்க நான் அவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும்?

5.   அமைச்சரே, என் மகன்களுக்கு ஒரு சரியான ஆசிரியரைக் கண்டுபிடி.  பண்பு, பணிவு மற்றும் அரசாலும் தகுதியினை இவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய ஒருவராக அவர் இருக்க வேண்டும்.

1.   அத்தகைய ஆசிரியரை நாங்கள் நிச்சயமாகக் கண்டுபிடிப்போம், மாமன்னரே!*

2.   மகா - பெரிய;  ராஜா - மன்னர்

6.   அமைச்சர்கள் கடைசியில் விஷ்ணு ஷர்மா என்ற ஆசிரியரைக் கண்டுபிடித்தனர்.

1. மாமன்னரே!  அவர்களை என் குருகுலத்திற்கு அனுப்புங்கள். நான் அவர்களுக்குக் கற்பிப்பேன், அவர்களை சிறந்த மனிதர்களாகவும், சிறந்த அரசர்களாகவும் மாற்றுகிறேன்.

7.   முறையான கல்வியின் மீதான இளவரசர்களின் வெறுப்பை அறிந்த விஷ்ணு ஷர்மா ஒரு தனித்துவமான கற்பித்தல் முறையைப் பயன்படுத்தினார். மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் விலங்குகள் மற்றும் பறவைகளின் கதைகளை அவர் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.  ஒவ்வொரு கதையிலும் அதனுடன் தொடர்புடைய ஒரு ஆழமான அறக் கருத்துக்கள் பொதிந்து இருந்தன.  விஷ்ணு ஷர்மா அனைத்து கதைகளையும் 5 முக்கிய தந்திரங்களாக ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு மன்னனும் அவற்றைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

8.   1 - மித்ர பேதா - நண்பர்கள் மத்தியில் மோதல்களைத் தூண்டும் கலை

இந்த கதைகளின் தொகுப்பு இளவரசர்களுக்கு எதிரி நாடுகளின் வலுவான நட்பு நாடுகளை எவ்வாறு உடைப்பது என்பதைக் கற்பித்தது

9.   2 - மித்ர லாபா - நண்பர்களைப் ஒருங்கினைக்கும் கலை

இந்த கதைகளின் தொகுப்பு இளவரசர்களுக்கு நாடு தேவைப்படும்போது உதவிக்கு வரக்கூடிய அண்டை மாநிலங்களுடன் எவ்வாறு நட்பாக இருக்க வேண்டும் என்று கற்பித்தது.

10. 3 - விக்ரஹாம்

இந்த கதைகளின் தொகுப்பு இளவரசர்களுக்கு எதிரி நாடுகளின் வலுவான நட்பு நாடுகளை எவ்வாறு உடைப்பது என்பதைக் கற்பித்தது.

11. 4 - சந்தி - ஒப்பந்தங்களின் கலை

இரண்டு வலுவான எதிரிகள் எவ்வாறு சமாதானத்தை நோக்கி ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் பயனடையலாம் என்பதை இந்த கதைகளின் தொகுப்பு இளவரசர்களுக்குக் கற்பித்தது

12. அபரீக்ஷிதா-கரகம்

இந்த கதைகளின் தொகுப்பு இளவரசர்களுக்கு எப்படி அவசரமாக செயல்படக் கூடாது என்பது குறித்தும் அவர்களின் செயல்களின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்படக் கூடாது என்பது குறித்தும் கற்பித்தது.

13. அனைத்து அரசியல் அறிவையும் கற்றுக்கொண்ட இளவரசர்கள் பணிவும்  புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக வீடு திரும்பினர்.