இலக்கணம் – நன்னூல் – எழுத்து அதிகாரம்
|
| ஒரு மதிப்பெண் வினா வங்கி | ||||||||||
அலகு 1
1. நன்னூலை எழுதியவர் யார்? K1
அ. நம்பியாண்டார் நம்பி ஆ.
அகத்திய முனிவர்
இ.
பவணந்தி முனிவர் ஈ.
மறைமலையடிகள்
2. நன்னூலிற்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்? K1
அ. பேராசிரியர் ஆ. மயிலை நாதர்
இ. நச்சினார்கினியர் ஈ. இளம்பூரணர்
3. நூல் வகைகளை வரிசைப்படுத்துக. K2
அ வழி, முதல், சார்பு ஆ. சார்பு, வழி, முதல்,
இ. சார்பு, முதல், வழி
ஈ.
முதல், வழி, சார்பு
4. நூற்பயன் எத்தனை வகைப்படும்? K1
அ. நான்கு
ஆ. ஐந்து
இ. ஆறு ஈ. ஏழு
5. பாயிரம் எத்தனை வகைப்படும்? K1
அ.
பத்து ஆ.
எட்டு இ.
நான்கு ஈ.
இரண்டு
6. நன்னூல் குறிப்பிடும் மதம் என்பதன் பொருள் தெரிக. K2
அ. பிடிவாதம் ஆ. கடவுள்
இ. கொள்கை (அ) கோட்பாடு ஈ. வழிபாட்டுச் சடங்குகள்
7. நூலில் இருக்கக் கூடாத குற்றங்களின் எண்ணிக்கையைத் தேர்க K2
அ. ஐந்து ஆ. பத்து
இ. பதினைந்து ஈ. இருபது
8. நன்னூலார் குறிப்பிடும் உத்திகளின் எண்ணிக்கையைச்
சுட்டுக. K2
அ. பத்து ஆ. இருபத்தைந்து
இ. முப்பது ஈ. முப்பத்திரண்டு
அலகு 2
1. சார்பெழுத்துக்களின் வகைகள் எத்தனை? K1
அ. ஆறு ஆ.
எட்டு
இ. இருபது ஈ.
பத்து.
2. இகர, ஔகாரத்தின் இன எழுத்துக்களை எடுத்துக்காட்டுக. K2
அ. ஏ,
ஐ ஆ.
ஓ,
ஊ
இ. ஐ,
உ ஈ. எ, உ
3. எழுத்துக்களின் பிறப்பிடங்களை நிரல்படுத்துக. K2
அ. கழுத்து, நெஞ்சு, மூக்கு, தலை ஆ.
மூக்கு. தலை, கழுத்து, நெஞ்சு
இ. தலை,
மூக்கு, நெஞ்சு, கழுத்து ஈ.
நெஞ்சம், கழுத்து, தலை,
மூக்கு
4. எழுத்துக்கள் பிறப்பதற்கான முயற்சியிடங்களை நிரல்படுத்துக. K2
அ. இதழ், நாக்கு, பல்,
அண்ணம் ஆ.
நாக்கு, பல், இதழ், அண்ணம்
இ.
பல்,
இதழ், அண்ணம், நாக்கு ஈ.
அண்ணம், பல், நாக்கு, இதழ்
5. குற்றியலுகரத்தின் வகைகள் எத்தனை? K1
அ. ஏழு ஆ. ஐந்து
இ. ஆறு ஈ. நான்கு
6. அளபெடுக்கும் உயிரெழுத்துக்கள் எத்தனை? K1
அ. ஏழு ஆ. ஐந்து
இ. ஆறு ஈ. நான்கு
7. சுட்டெழுத்துக்கள் எவை? K1
அ. ஆ, ஈ, ஊ ஆ. எ, ஏ, ஐ
இ. அ, இ, உ ஈ. ஒ, ஓ, ஔ
8. இதழ் பொருந்த பிறக்கும் ஒலிகளை குறிப்பிடுக. K2
அ. வ, ய ஆ. ங, ஞ
இ. ப, ம ஈ. த, ந
அலகு 3
1. மொழிமுதல் வராத மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கையைத் தேர்க. K2
அ. பதினெட்டு ஆ. எட்டு
இ. இருபத்தெட்டு ஈ. முப்பத்தெட்டு
2. சொல்லிற்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? K1
அ. 06 ஆ.
12
இ. 18
ஈ.
24
3. சந்தியக்கரம் என்பது எதனோடு பொருந்தும்? K2
அ. உயிரெழுத்து ஆ. மெய்யெழுத்து
இ. கூட்டெழுத்து ஈ. தனியெழுத்து
4. பதத்தை நன்னூலார் எத்தனை வகைகளாகக் குறிப்பிடுகிறார்? K1
அ. 8 ஆ. 6
இ. 4 ஈ. 2
5. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? K1
அ.12 ஆ.
42
இ. 24 ஈ.
84
6. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? K1
அ. 13 ஆ.
04
இ. 09 ஈ.
06
7. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது எது என குறிக்க. K2
அ. சாரியை ஆ. விகாரம்
இ. சந்தி ஈ. விகுதி
8. எதிர்கால இடைநிலைகளைக் குறிப்பிடுக. K2
அ. ப், வ் ஆ. த், ந்
இ. ய்,ர் ஈ. ண், ன்
அலகு 4
1. நிலைமொழியும் வருமொழியும் சேர்வதற்கான கலைச்சொல் எது? K1
அ. புணர்ச்சி ஆ. சேர்க்கை
இ. இணைவு ஈ. உடன்பாடு
2. தோன்றல், திரிதல், கெடுதல் எவ்வகைப் புணர்ச்சி என்பதைத் தேர்க. K2
அ. வேற்றுமைப் புணர்ச்சி ஆ. அல்வழிப் புணர்ச்சி
இ. விகாரப் புணர்ச்சி ஈ. உயிரீற்றுப் புணர்ச்சி
3. செய்யுள் விகாரம் எத்தனை? K1
அ. 06 ஆ. 12
இ. 09 ஈ. 15
4. இ, ஈ, ஐ உயிர்வழி வருவது எது எழுதுக. K2
அ. வகரம் வரும் ஆ. தகரம் வரும்
இ. யகரம் வரும் ஈ. நகரம் வரும்
5. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பது எது? K1
அ. குற்றியலிகரம் ஆ. குற்றியலுகரம்
இ. ஐகாரக் குறுக்கம் ஈ. ஔகாரக் குறுக்கம்
6. தேங்காய் பிரித்து எழுதுக. K2
அ. தேன்+காய் ஆ. தேங்கு+காய்
இ. தேங்+காய் ஈ. தெங்கு + காய்
7. பூ+கொடி=பூங்கொடி என்று சேர்வதற்கான விதி என்ன? K1
அ. இன மென்மை தோன்றுதல் ஆ. இன வன்மை தோன்றுதல்
இ. இனம் திரிதல் ஈ. இனம் கெடுதல்
8. தொண்ணூறு பிரித்து எழுதுக. K2
அ. தொண்+ நூறு ஆ. ஒன்பஃது + பத்து
இ. ஒன்பஃது+ நூறு ஈ. தொந்+நூறு
அலகு 5
1. ண,ன இறுதி முன்னர் வல்லினம் வந்தால் எவ்வாறு திரியும்? K1
அ. த,ந ஆ. ட,ந
இ. ர,ற ஈ. ட,ற
2. நன்னூலார் குறிப்பிடும் ‘உணவு எண்’ என்பது என்ன? K1
அ. எள் ஆ.
நெல்
இ. திணை ஈ.
வரகு
3. நன்னூலார் குறிப்பிடும் ‘எகின்’ என்பதன் பொருள் என்ன? K1
அ. குயில் ஆ. மயில்
இ. அன்னம் ஈ. கிள்ளை
4. ‘அங்கை’ என்பதைப் பிரித்து எழுதுக. K2
அ. அ+கை ஆ. அங்+கை இ. அகம் + கை ஈ. அம்+கை
5.
லள வேற்றுமையில் மாறும் தன்மையினைத் தொடர்புபடுத்துக. K2
அ. ணன என்று மாறும் ஆ. ரற என்று மாறும் இ. லாளா என்று மாறும் ஈ. றட என்று மாறும்.
6. நன்னூலார் குறிப்பிடும் சாரியைகள் எத்தனை? K1
அ. 17 ஆ.
07
இ. 10 ஈ.
12
7. ’எல்லீர்’ எனும் சொல்லிற்குரிய சாரியையினைக் குறிப்பிடுக. K2
அ. நம் ஆ. நும்
இ. தம் ஈ. எம்
8. ‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடும்’ என்பதற்குச் சான்றுரைக்க. K2
அ. அதனை ஆ. அது
இ. அவ்வாறு ஈ. அப்படி
இருமதிப்பெண் வினாக்கள்
அலகு 1
1.
நன்னூல் வழி மாணாக்கர்களை
வகைப்படுத்துகிறார்? சான்று காட்டுக. K1
2.
ஆசிரியருக்கான
தகுதிகளாக நன்னூல் உரைக்கும் செய்தி யாது? K1
3.
நூலின் வகைகள்
குறித்து எடுத்துரைக்க. K2
4.
நூலின் குற்றங்கள்
எத்தனை வகைப்படும்? அவை யாவை? K1
5.
சிறப்புப் பாயிரத்தில்
இருக்க வேண்டியன யாவை? K1
அலகு 2
1.
முதல் எழுத்துக்கள்
எத்தனை?
அவற்றை வகைப்படுத்துக. K2
2.
சார்பெழுத்துக்கள்
எத்தனை அவை யாவை? K1
3.
எழுத்துக்கள் பிறப்பதற்கு
காரணமான உறுப்புக்களை எடுத்துரைக்க. K2
4.
குற்றியலுகரத்தின்
வகைகள் யாவை? K1
5.
எழுத்துக்களின்
மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக. K2
அலகு 3
1.
பதத்தின் இலக்கணம்
கூறுக. K2
2.
ஓரெழுத்து ஒருமொழி
சான்றுடன் சுட்டுக. K2
3.
பகுபத உறுப்புக்கள்
யாவை? K1
4.
பண்புப் பகுதியின்
இலக்கணம் கூறுக. K2
5.
முன்னிலை மற்றும்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை? K1
அலகு 4
1.
புணர்ச்சியின்
இலக்கணம் கூறுக. K2
2.
வேற்றுமையின் வகைகள்
யாவை?
உருபுகளுடன் சான்றுரைக்க. K1
3.
விகாரப் புணர்ச்சி
வருமிடங்கள் யாவை? K1
4.
திசைப் பெயர்ப்
புணர்ச்சி சான்று காட்டுக. K2
5.
தெங்கு
– தேங்காய் என மாறுவதன் இலக்கணக் குறிப்பு தருக. K2
அலகு 5
1.
உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே – விளக்குக. K2
2.
வேற்றுமைப் புணர்ச்சியில்
தமிழ்,
தாழ் ஆகிய சொற்களின் மாற்றங்களைக் குறிப்பிடுக. K2
3.
எகின் என்ற சொல்லிற்கு
மெய்யீற்றுப் புணர்ச்சி விதி குறிப்புரைக்க. K2
4.
மகர ஈற்றுப் புணர்ச்சிக்கு
இலக்கணம் பகர்க. K2
5.
எல்லாரும்,
எல்லீரும் எனும் பெயர்கள் உருபு ஏற்றல் விதியினை எடுத்துரைக்க. K2
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
அலகு 1
1.
நூலின் இலக்கண
வகைகளை
– எடுத்துரைக்க. K2
2.
எழுவகை மதம்
– விளக்குக. K2
3.
பத்து வகை அழகுகளை
வரிசைப்படுத்தி விளக்கியுரைக்க. K3
4.
கல்வி கற்கும்
முறை குறித்து நன்னூலாரின் கருத்தினை எடுத்தியம்புக. K1
5.
சிறப்புப் பாயிரத்தின்
இயல்புகள் யாவை?
K1
அலகு 2
1.
எழுத்ததிகாரத்தில்
கூறப்படும் இலக்கணங்கள் யாவை? K1
2.
சார்பெழுத்துக்களைச்
சான்றுகளுடன் புலப்படுத்துக. K4
3.
உயிரெழுத்துக்களின்
பிறப்பிலக்கணம் விளக்கியுரைக்க. K2
4.
குற்றியலுகரத்தின்
வகைகளைச் சான்றுகளுடன் எடுத்துரைக்க. K3
5.
மொழி இறுதி எழுத்துக்கள்
இன்றைய வழக்கோடு பொருத்திக் காட்டுக. K4
அலகு 3
1.
பதத்தின் இலக்கணம்,
வகை குறித்து விளக்குக. K2
2.
பகுபத இலக்கணம்
– சான்றுகாட்டி வகைப்படுத்துக. K2
3.
பகுபத உறுப்புகளின்
வகைகளை எடுத்தியம்புக. K3
4.
பண்புப் பெயர்
புணர்ச்சி மாற்றங்களை நிரல்படுத்துக. K2
5.
வினை இடைநிலை சான்றுகளுடன்
விளக்கியுரைக்க. K2
அலகு 4
1.
வேற்றுமைப் புணர்ச்சி,
அல்வழிப்புணர்ச்சி எடுத்துரைக்க. K3
2.
செய்யுள் விகாரம்
சான்று காட்டி விளக்குக. K2
3.
உயிர் வரின் உக்குறள்
மெய்விட்டு ஓடும் – இலக்கணம் கூறி
விளக்குக. K2
4.
வாழிய,
சாவ, பல சில ஆகிய சொற்களின் புணர்ச்சி விதிகளை எழுதுக. K4
5.
ஒன்று,
இரண்டு, மூன்று ஆகிய எண்களுக்கான புணர்ச்சி விதிகளைச் சான்றுகளோடு பொருத்திக் காட்டுக.
K4
அலகு 5
1.
னகர ஈற்றுப் புணர்ச்சி
விதி புலப்படுத்துக. K4
2.
ய்,
ர், ழ் ஈற்றுச் சிறப்பு விதி குறித்து விரித்துரைக்க. K3
3.
ல,ள ஈற்றுச் சிறப்பு விதியினை எடுத்தியம்புக. K3
4.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் பெறும்
சாரியைகளை வகைப்படுத்திக் காட்டுக. K3
5.
சாரியை வரும் முறைமையினை
சான்றுடன் காட்டுக. K4
கட்டுரை வினா (பத்து மதிப்பெண் வினாக்கள்)
அலகு 1
1.
சிறப்புப்
பாயிரக் கூறுகளை நன்னூலோடு பொருத்திக் காட்டுக. K3
2.
நூலின் உத்திகளை
விரித்துரைக்க. K4
3.
ஆசிரியர்,
மாணாக்கர் குறித்து நன்னூலார் கூறும் கருத்துக்களைத் தொகுத்துரைக்க.K4
அலகு 2
1.
தமிழ் எழுத்துக்களின்
எண்,
பெயர், முறை பற்றி கட்டுரை வரைக. K2
2.
தமிழ் எழுத்துக்களின்
பிறப்பிலக்கண விதிகளை நிரல்படுத்தி விளக்குக. K2
3.
மொழி முதல்,
மொழி இறுதி எழுத்துக்களை சான்றுகளுடன் விவரிக்க. K4
அலகு 3
1.
பதம் மற்றும் அதன்
வகை குறித்துக் கட்டுரை வரைக. K2
2.
பகுபத உறுப்புக்களைப்
பாகுபடுத்தி விளக்குக. K4
3.
விகுதியும் இடைநிலையும்
புலப்படுத்தும் இலக்கண விதிகளை எடுத்துக்காட்டுக. K3
அலகு 4
1.
உயிர் எழுத்துக்களின்
புணர்ச்சி விதிகளைத் தொகுத்துரைக்க. K4
2.
உயிர் ஈற்றின்
முன் வல்லினம் அடையும் மாற்றங்களை நிரல்படுத்தி விளக்குக. K3
3.
எண்ணுப்பெயர்ப்
புணர்ச்சிக்குரிய இலக்கணம் குறித்துக் கட்டுரை வரைக. K4
அலகு 5
1.
மெய்யீற்றுப் புணர்ச்சி விதிகளின்
வழி மெல்லின
ஒற்றுக்களில் ஏற்படும்
மாற்றங்களைக் கண்டறிந்து
விளக்குக. K3
2.
மெய்யீற்றுப் புணரியல் உணர்த்தும்
புணர்ச்சி மாற்றங்களைத்
தொகுத்துக் கட்டுரைக்க. K4
3.
உருபுகள்
புணரும் முறைமையைப் புலப்படுத்துக. K4